மத்ஹபுகளை குறை கூறலாமா ?
மார்க்க அறிவில்லாத மக்கள் மத்ஹபுகளை பற்றி குறை
கூறுகின்றனர் .ஒருமுஸ்லிம் இந்த மத்ஹபைத் தான்
பின்பற்ற வேண்டுமென்று கட்டாயம் கிடையாது .ஆனால்
இந்த (நான்கு ) மத்ஹபில் தமக்கு பிடித்தமான
ஒரு மத்ஹபைப் பின்பற்றிக்கொள்ளலாம் .இந்த நான்கு
மத்ஹபின் முறைகளும் நாயகம் (சள்ளலலாஹு
அலைஹிவசள்ளம் ) அவர்கள் செய்து வந்த முறை தான் .
உலகம் முடியும் வரை
இந்த நான்கு மத்ஹபுகளின் சட்டங்களும் செயல்பட வேண்டும்
.ஒரு மத்ஹபின் சட்டங்கள் மட்டும் செயல்பட்டால்
மற்ற மூன்று முறைகளும் செயலற்றுப் போய்
விடும் . எனவே அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நாயகம்
(ஸல் )அவர்களின் மற்ற மூன்று மத்ஹபின் முறைகளும் செயல்
படாமலிருக்கும். மேலும் மத்ஹபுகளைக் குறை கூறுவது நாயகம்
(ஸல் ) அவர்களையே குறை கூறுவதற்கு ஒப்பாகும் .
நாயகம் (ஸல் ) அவர்கள் சில சமயங்களில் கிராஅத் ஓதும் போது
பிஸ்மியை சப்தம் வெளிப்படும் வகையிலும் அவ்வாறே
சூரத்துல் பாத்திஹாவை ஓதிமுடிந்ததும் ''' ஆமின் '' என்று
சப்தமிட்டும் ஓதியுள்ளார்கள் .இந்த முறை ஷாபிமத்ஹபில்
பின்பற்றபடுகிறது .மேலும் சில சமயங்களில் மேற்கண்ட
வற்றை சப்தம் வெளிபடாமலும் ஓதியுள்ளார்கள்
. இந்த முறை தான் ஹனபி மத்ஹபில்பின்பற்றபடுகிறது .
இதைப் போன்று
தான் பல அம்சங்கள் உள்ளன . நான்கு மத்ஹபுகளின் ஒவ்வொரு
சட்டத்திற்கும் ஆதாரம் உள்ளது .சில பெரியார்கள்பேணுதலுக்காக
வேண்டி தங்கள் வாழ்க்கையில் நான்கு மத்ஹபுகளையும்
பின்பற்றியுள்ளார்கள் . சில காலம் ஷாபி, சில காலம் ஹனபி
இவ்வாறு ஹன்பலிமாலிக்கீ மத்ஹபுகளைப் பின் பற்றி
யுள்ளார்கள் .அவரவர் பின்பற்றக்கூடிய மத்ஹபுகளின் சுன்னத்து
களைப் பின்பற்றினால்மற்ற மத்ஹபுகளின் பர்லுகளும் நிறைவேறி
விடும் .அவ்வாறு செய்வதுதான் பேணுதலான (தக்வாவுடைய )
வாழ்க்கையாகும் .உதாரணமாக ஷாபியி - மத்ஹபின் படி
தலையில் ஒரு சிறிதளவு மஸ்ஹூ செய்வது பர்ளு .ஹனபி
மத்ஹபின் படி தலையில் நான்கில் ஒரு பாகம் மஸ்ஹூ
செய்வது பர்ளுஆனால் வேறொரு மத்ஹபில் தலை முழுவதும்
மஸ்ஹூ செய்வது பர்ளுஷாபியி - ஹனபி இரு மத்ஹபிலும்
தலை முழுவதும் மஸ்ஹூ செய்வதுசுன்னத் எனவே இரு
மத்ஹபுகளையும் பின்பற்ற கூடியவர்களும் சுன்னத்தைப்
பின்பற்றி தலை முழுவதும் மஸ்ஹூ செய்தால் மற்ற மத்ஹபின்
பர்ளுநிறைவேறி விடும் .இவ்வாறே பல அம்சங்கள் உள்ளன
எனவே மேற்குறிப்பிட்டபடி எல்லா சுன்னதுகளையும் பின்
பற்ற வேண்டும் .மேலும் நம்மில் அநேகர் பர்ளுகளை மட்டும்
நிறைவேற்றி விட்டு சுன்னத்துகளை விட்டு விடுகின்றனர் .(பர்ளு
மட்டும் நிறைவேற்றினால் போதுமா ?) சுன்னத்து களென்பது
விட்டுவிடுவதற்காக ஏற்படுத்தபடவில்லை எந்த
காரியங்களிலும் சுன்னத்துகளைப் பின்பற்றினால் தான்
அந்த காரியம் சரியாக நிறைவேறும் .மேலும்கிடைக்க
வேண்டிய கூலியும் (நன்மையையும் )சரியாக கிடைக்கும் .
அநேகர்இதை சரியாக உணர்வதில்லை .அல்லாஹ்வின்
துதரிடமே உங்களுக்குதிட்டமாக அழகிய முன்மாதிரி
இருக்கிறது .மேலும் பல இடங்களில்நாயகம் (ஸல் )
அவர்களைப்பின்பற்றும் படியாகவும் அல்லாஹூ தஆலா
கூறுகிறான் .மேலும் இரு உலகிலும் வெற்றியடைவதற்கு
நாயகம் (ஸல் )அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற
வேண்டும் மேலும் அவர்களின்வாழ்க்கை முறை ஒவ்வொன்றும்
ஹிதாயத்அடைவதற்கு காரணமாகஇருக்கிறது எல்லா
அமல்களும் பர்ளு என்பது மிகக் குறைவாகவே இருக்கும்
ஆனால் சுன்னது தான் அதிகமாக இருக்கும். உதாரணமாக
ஒழுவின் பர்ளுகள் ஷாபியி மத்ஹபில் ஆறு ஹனபி
மத்ஹபில் நான்கு ஆனால் ஒழுவின் சுன்னத்துகள் பதினைந்து
இருபது என்றிருக்கும் தொழுகையின் பர்ளுகள் பத்தொன்பது,
பதிமூன்று என்றிருக்கும் ஆனால் சுன்னத்து கள் இருபத்தி
ஐந்து ,முப்பது என்றிருக்கும் இதைப்போன்று ஒவ்வோர்
அம்சங்களிலும் காண முடியும் .எனவே ,நம்முடைய எல்லா
காரியங்களிலும் சுன்னத்துகளை நாம் பின்பற்ற முழு
முயற்சி எடுக்க வேண்டும் .எந்தளவு சுன்னத்துகளை நாம்
பின்பற்றுகிறோமோ அந்தளவு நமக்கு ஹிதாயத் என்ற (நூர்)
ஒளி கிடைத்து கொண்டேயிருக்கும் . நம்மில் பலர் தொழுகையில்
மட்டும்சுன்னத்துகளை பின்பற்றி மற்ற செயல்களில் சுன்னத்தை
விட்டு விடு கின்றனர் .இன்னும் பலர் மற்ற செயல்களில் சுன்னத்தைப்
பின்பற்றிதொழுகையிலுள்ள சுன்னத்தை விட்டு விடுகின்றனர்
சுன்னத்துகளைவிடும் போது பர்ளுகளை விடும் சூழ் நிலை நமை
அறியாமலேயே
ஏற்பட்டு விடும்\
world ahle sunnat jamaat tamil
மாஷா அல்லாஹ் நல்ல தகவல்
பதிலளிநீக்கு