செவ்வாய், 3 ஜனவரி, 2012

வழி காட்டுகிறது கோவை -விழிப்படையுமா சமுதாயம் ? என்ற 2) ஆளூர் நவாஸ் எழுதிய கட்டுரைக்கு பதில்


வழி  காட்டுகிறது கோவை -விழிப்படையுமா சமுதாயம் ? என்ற  ஆளூர் நவாஸ்  எழுதிய கட்டுரைக்கு
பதில்

 நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி கோவை 
 மாநகராட்சி யையும்  முத்துப்பேட்டை பேருராட்சி
 யையும் உதாரணம் காட்டி  மாநில அளவில் முஸ்லிம்
களிடம்  ஏற்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளர்சி  கோவை
என்கிற  அளவில்சுருங்கிப்போனது ஏன் என்றும்  முத்துப்பேட்டையில்  மனித  நேய மக்கள் கட்சிவேட்பாளர் போட்டியிடாமல்  இருந்திருந்தால் எஸ் டி பி ஐ  வெற்றி  பெற்றிருக்கும்  என்றும்  கட்டுரை ஆசிரியர்  குறிப்பிட்டுள்ளார் .நானும் இரண்டு பிரபல 
 ஊர்களில் தேர்தல் முடிவுகளை சமுதாயத்தின்  சிந்தனைக்கு
 வைக்கிறேன் . நாற்பதாயிரம் முஸ்லிம்கள்
 வாழும்  காயல்பட்டினத்தில்
  மார்க்க  ரீதியாக பிரச்சனைகள் ,
பிளவுகள்  இருந்தாலும்  கடந்த  40  ஆண்டுகளாக  தலைவர்  தேர்தல் ஜமா அத் அடிப்படையிலலேயே  தேர்ந்தெடுக்கப்பட்டு
 வந்தது . இந்த ஆண்டும்  காயல்பட்டினம்  முஸ்லிம்  ஐக்கிய
 பேரவை  ஏற்பாட்டில்  அனைத்து ஜமாஅத்களும்  ஒருங்கிணைந்து 
 முறைப்படி  தேர்வு செய்து நகராட்சி த் தலைவர்  பதவிக்கு  ஒரு பொது வேட்பாளரை  அறிவித்தனர் . இதை  காங்கிரஸ் ,
அ தி மு க ,திமுக ,இ .யூ.முஸ்லிம் லீக் , விசி ,பாமக ,தேமுதிக , ஏன் பாஜக  உள்ளிட்ட  எல்லா கட்சிகளும்ஏற்று தங்கள்  வேட்பாளரை  நிறுத்த மாட்டோம் என அறிவித்து விட்டன .
அப்படியிருந்தும் சிலர்  ஒரு வேட்பாளரை  நிறுத்தி  புறநகர்
  பகுதிகளின்  முஸ்லிம் அல்லாத  சகோதர சமுதாயமக்களின்
  துணையோடு  ஒரு வரை வெற்றி பெற வைத்தனர் . இதன் மூலம் ஐக்கிய ஜமாஅத்  திற்கு  தலைகுனிவு  ஏற்பட்டு  இனிவரும் 
 காலங்களில்  ஜமாஅத்  வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதும் 
 தகர்க்கப்பட்டு விட்டது . ''' ஒட்டு மொத்த ஜமாஅத்  வேட்பாளரை த் தோற்கடித்துஅவரை எதிர்த்து ப் போட்டியிட்டவரை   வெற்றி பெற வைக்க  நாங்கள் தீவிரமாக ப்  பணியாற்றினோம் '''  என மனித நேய மக்கள் கட்சி  ஒப்புதல்  வாக்கு மூலம் அளித்துள்ளது 
 பார்க்க  மக்கள் உரிமை ;;  அக் டோபர் 28  நவம்பர்  3 , 2011 ) 
 இது தான் ஜமாஅத்  பெருமையை  நிலை நாட்டுவதன்  
அடையாளமா ? கோவையில்  அப்படி ;காயல்பட்டினத்தில்
  இப்படியா ? முத்துப்பேட்டையில்  ம ம க  போட்டியிட்ட
தால்எஸ் டி பி ஐ  தோல்வி அடைந்து  384  வாக்குகள்
 வித்தியாசத்தில்  அருணாசலம் வெற்றி பெற்றுவிட்டார்  என ஆதங்கபடுகிரார்கள்   மேட்டுப்பாளையம்   நகராட்சியை
 பாருங்கள் . தமிழ் நாட்டில்  முகவரி இல்லாத பிஜேபி  இந்த
 நகராட்சியின்  ''தலைவர்'' பதவியை க் கைப்பற்றியுள்ளது . 
மேட்டு பாளையத்தில்  இதற்கு முன்  காங் கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் .திமுக , காங்கிரஸ்  கட்சியினர் 
  தலைவர்களாக  இருந்துள்ளனர். இந்த முறை  முதன் முதலாக திமுக தனது  வேட்பாளராக  அதன்  நகரசெயலாளர்  எம்   அப்துல்
 ஹமீதை அறிவித்தது .அ இ தி மு க  நாசர் என்பவரை யும் ,
 பா ம க தேமுதிக  ஆகியவையும் முஸ்லிம்களையே தங்கள்
 வேட்பாளர்களாக  அறிவித்தன .சமுதாய அமைப்புகள் வார்டுகளில் 
தனித்தனியாக போட்டி யிட்டு கடும் போட்டியை  ஏற்படுத்தின 
.. திமுக- அதிமுக தேமுதிக  முறையே  9300  ,5850  , 1500   , என  17650  வாக்குகளை பிரித்தன  பாரதிய ஜனதா  கட்சி 
வரலாற்றில்  முதன் முறையாக 11000  வாக்குகளை 
 பெற்று வெற்றி பெற்றது   முஸ்லிம் வாக்குகள்  இப்படி பிரிய -கட்சி உணர்வையும்  தாண்டி  இந்துக்கள்  ஒரு முகமாக  பிஜேபிக்கு 
வாக்களித்த தற்கு  காரணம்  என்ன தெரியுமா ?   கடந்த 
ஆண்டு  இந்திய சுதந்திர தினத்தின் போது  எஸ்டிபிஐ(பிஎப்ஐ ) 
 நடத்திய அணிவகுப்பும் ஒரு காரணம் என்பது கசப்பானஉண்மை . முஸ்லிம் இளைஞர் களுக்குக் கட்டுப்பாடும்  பயிற்சியும்
  கண்டிப்பாகதேவை .ஆனால்  அப்படி பயிற்சி பெற்றவர்களை  
ஓர்இடத்தில  திரட்டி  மற்றவர்கள் அச்சப்படும்  வகையில் 
அணிவகுக்கச்செய்வது  சமுதாயதிற்கு  நன்மை பயக்க கூடியதா ?/
   தமிழ் நாட்டில் முஸ்லிம்கள்  பத்து சதவீதம்  கூட இல்லை 
 இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவர்களை  விட  குறைவு  இதை  உணர்ந்து  புத்திசாலி தனமாக அரசியலில்  முடிவெடுப்பதே
 சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் 

 காயல்  மகபூப்  மாநில  செயலாளர்  இ யூ  முஸ்லீம் லீக்
செய்தி ஆசிரியர்  மணிச்சுடர்    நாளிதழ்  சென்னை 
நன்றி  சம நிலை சமுதாயம்  டிசம்பர்  2011   ௦    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக