வெள்ளி, 27 ஜனவரி, 2012
தொட்டு விடும் தூரம்: Photos: Eid Al Fitr 2010 - Around the world
தொட்டு விடும் தூரம்: Photos: Eid Al Fitr 2010 - Around the world: Eid Al Fitr 2010 - Around the world Prayer and its celebration 1. New moon: A crescent - marking the start of a new lunar (Shawwal) mon...
வெள்ளிமேடை தகவல் தளம்: அவ்லியாக்களின்..
வெள்ளிமேடை தகவல் தளம்: அவ்லியாக்களின்..: அ.அப்துல் அஜீஸ் பாகவி சிந்தனைச் சரம் சமீப சில காலங்களாக இறை நேசாகள் எனும் சொல் தவிக்கப்பட வேண்டிய ஒரு...
வியாழன், 26 ஜனவரி, 2012
திங்கள், 23 ஜனவரி, 2012
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
வெள்ளிமேடை தகவல் தளம்: மீலாது சிந்தனை – அவர் இப்படி இருந்தார்!
வெள்ளிமேடை தகவல் தளம்: மீலாது சிந்தனை – அவர் இப்படி இருந்தார்!: மீ அ.அப்துல் அஜூஸ் பாகவி ( சமநிலைச் சமுதாயம் மாத பிப்ரவரி இதழில் நான் எழுதிய இக்கட்டுரையை ஆலிம்களுக்கா...
புதன், 18 ஜனவரி, 2012
"பிளாஸ்டிக்' அரக்கனை அழிப்போம்
"பிளாஸ்டிக்' அரக்கனை அழிப்போம்
எங்கும், எதிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு எல்லை தாண்டிவிட்டது. மனிதர்களும் பிளாஸ்டிக்கும் பிரிக்க முடியாத ஒன்று என்ற மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 கோடி டன் பிளாஸ்டிக்கில் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 2.5 கோடி டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் மக்காதவை.
இப்படி மனித வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக்கால், இந்தப் புவியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கடும் தீங்குதான் ஏற்படுகிறது. இதன் கோரத்தைப் புரிந்து கொள்ளாமல் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நவ நாகரிகமாகவே (?) நினைக்கின்றோம்.
பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் பாலிஎத்திலீன், பாலிவினைல் குளோரைடு, பாலிஸ்டைரின் ஆகிய ரசாயனப் பொருள்களால்தான் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றை ரசாயனப் பொருள்கள் என்று சொல்வதைவிட "உயிர்க்கொல்லிகள்' என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
அந்த அளவுக்கு இவை கொடியவை. பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் போதும் பயன்பாட்டுக்குப் பின்னர் அவற்றை மறுசுழற்சி செய்யும் போதும் அவற்றில் இருந்து வெளிவரும் நச்சுகளால் ஏற்படும் தீங்குகள் கொஞ்ச நஞ்சமல்ல.
பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பின்போது அதில் இருந்து எத்திலீன் ஆக்ûஸடு, பென்சீன், சைலீன் போன்ற கொடிய நச்சுகள் வெளியேறுகின்றன. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப்பெருக்கமும் சீரழிகின்றன.
இந்த நச்சுகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிளாஸ்டிக் நச்சுகள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அவற்றில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. சில அரிய வகை உயிரினங்கள் அடியோடு அழியும் நிலை ஏற்படுகிறது.
இந்த அபாயச் சூழல் குறித்து உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்டகாலமாகவே உரக்கக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தக் குரல் ஆட்சியாளர்களின் செவியில் விழவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காய்தான் உள்ளது.
இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஓராண்டுக்குச் சேரும் மொத்தக் கழிவுகளில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள்தான். இதனால் நகர்ப்புற மக்களுக்குக் கடும் தீங்கு ஏற்படுகின்றது.
மும்பையில் 1998-ல் பெய்த பலத்த மழையின் போது அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்திருந்ததால் மழைநீர் வழிந்தோடவில்லை.
வெள்ளம் தேங்கியதால் மும்பையே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது அந்நகர மக்கள் சந்தித்தத் துயரத்தைச் சொல்லிமாளாது.
அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகர்ப்புறங்களில் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்ட 100 பசுமாடுகள் செத்து மடிந்ததாகவும், ஒரு பசுவின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகவும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியான செய்தி நாட்டையே உலுக்கியது. பிளாஸ்டிக்கின் கோரத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்தார்களா? அந்த மோசமான நிகழ்வுக்குப் பிறகும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கையாளுவதில் மகாராஷ்டிர, உத்தரப் பிரதேச அரசுகளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இதை ஒரு பாடமாகப் பிற மாநிலங்களும் எடுத்துக்கொண்டதாய் தெரியவில்லை.
மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி பிளாஸ்டிக் பொருள்களை ஆராதிப்பதில்தான் முனைப்பு காட்டுகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை 90 சதவிகித வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் இடம்பிடித்துள்ளன. பெட்டிக் கடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
மாநகரங்களில் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை தெருக்களில் எங்கு பார்த்தாலும் கலர் கலராய் காட்சி அளிக்கின்றன. இவற்றால் கிராமங்கள் தங்களது பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்து நிற்கின்றன.
கூடுமானவரை பிளாஸ்டிக் புறக்கணிப்பு என்ற கொள்கையை வகுத்து அரசு செயல்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு ஆர்வமும் அவசியம். மக்களுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் கொடிய தீங்குகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். தங்களால் இயன்றவரை பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தங்களது பங்களிப்பை நல்க வேண்டும்.

thanks dinamani
புதன், 11 ஜனவரி, 2012
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!
Message body
இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில்கேரளாவிலும் "ஆத்தா சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிறது)
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,
* கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.
* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:
* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.
* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.
* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவரவியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)
இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi"
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum"
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"
இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.
இலைகளின் பலன்கள்:
* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.
* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.
* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.
இறுதியாக,
எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இல்லாமல் இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது. ஆனாலும் மனிதன் எல்லா நோய்களுக்கும் நிவாரணியை முழுமையாக உடனுக்குடன் கண்டுபிடித்துவிட முடியவில்லை. நோய் அறிமுகமான பிறகே பலவித ஆராய்ச்சிகளில் இறங்கி, கிடைக்கும் முடிவுகளை வைத்து மருந்துகளை சோதனை ஓட்டமாக முதலில் அறிமுகம் செய்து, அதிலும் வெற்றி கிடைத்த பிறகே மருந்துகள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்கு வருகின்றன. அதற்குள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள்கூட ஏற்பட்டுவிடுகின்றன. இவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நோயைக் குறிப்பிட்டு 'இதற்கு மருந்தே கிடையாது' என்று சொல்வது தற்காலிகமானதே என்று சொல்லலாம்.
"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூற்கள்:முஸ்லிம், பைஹகீ
"ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம் (4432)
அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா, பைஹகீ
இந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:
அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்:
நன்றி : பயணிக்கும் பதை
--
With Best Regards,
Umar Farook
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். நூல்: முஸ்லிம், திர்மிதி.

திங்கள், 9 ஜனவரி, 2012
வெளிநாடுகளில் இருந்து மிஸ்டுகால்: வோடபோன் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து மிஸ்டுகால்: வோடபோன் எச்சரிக்கை
சென்னை, ஜன.5: வெளிநாடுகளில் இருந்து மிஸ்டுகால் வந்தால் கவனமாக இருக்குமாறு வோடபோன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வோடபோனின் உத்தர பிரதேச வாடிக்கையாளர்களுக்கு நேற்று முன்தினம் ஐஎஸ்டி எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வந்துள்ளன. சென்னை வாடிக்கையாளர்களுக்கும் இதுபோல மிஸ்டுகால்கள் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐஎஸ்டி எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தால், அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு தொடர்பு கொண்டால் அதிக கட்டணம் பிடிக்கப்படும். மாறாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
+2245500118
+2245520098
+2245520091
+2245510436
இதுபோன்று +22 என்று வரக்கூடிய தவறிய அழைப்புகளை (மிஸ்டுகால்) எடுக்க வேண்டாம், மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வோடபோன் எச்சரிக்கை விடுத்துள்ளது
.
வெள்ளி, 6 ஜனவரி, 2012
வியாழன், 5 ஜனவரி, 2012
நாயகக் காதலர் தினம்
- நாயகக் காதலர் தினம்
மனிதர்களது வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாத
நாட்களாக மாறிவிடுகின்றன. அந்த நாள் வரும்போதெல்லாம் அந்த நாளில் ஏற்பட்ட
]
நிகழ்வுகள் மனதில் அலை அலையாக அசைகின்றன அந்த நாள் அவர்களது வாழ்வில்
மகிழ்சியை- வசந்தத்தைக் கொன்டு வந்த நாளாக இருந்தால்,அந்த நாளில் அனுபவித்த
அந்த மகிழ்சி அடுத்து வரும் ஆன்டுகளின் அந்த நாளின் போது அதே மகிழ்சியின்
அனுபவம் கிடைக்கிறது தனக்கு திருமணம் நடந்த நாள்! வியாபாரம் தொடங்கிய நாள்-
தனக்கென ஒரு வீடு வாங்கிய நாள்- நோயிலிருந்து மீண்ட நாள் விபத்திலிருந்து
காப்பாற்ற நாள்- இப்படி மகிழ்ச்சிக்குரிய நாள் மீண்டும் வரும்போதெல்லாம்
அந்தமகிழ்ச்சியை மீன்டும் நினைத்து பார்க்க தோன்றுகிறது அப்படிப் பார்த்தால் இந்த
உலகம் மீன்டும் மீன்டும் நினைத்து நினைத்து எண்ணி எண்ணி மகிழ்சி கொள்ள
வேன்டியஒரு நாள் அண்ணல் நபிகள்- ஆருயிர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்த பொன்னாள் தான் ரபிவுல் அவ்வல் பன்னிரண்டாம்
நாளாகிய திங்கட்கிழமை தான் அதை போன்ற சிறப்புக்குரிய இன்னொரு நாள் உலகில்
என்றுமே தோன்றப்போவதில்லை அந்த ஒரு நாள்- திரு நாள்- பெரு நாள்- தனி நாள்
இந்த நாள் வரும்போதெல்லாம் நாயகக் காதலர்கள் மெளலீது எனும் தங்கள் காதலரின்
புகழ் மாலைகளைப் பாடிப் பறக்கும் புல் புல் பறவைகளாக மாறிப் போகின்றனர் ஆம்
இந்த நாளை இந்த காதலர்கள்- ஆஷிக்கீன்கள் கொன்டாடி மகிழட்டும் ஏனென்றால்
ரபிவுல் அவ்வல் 12 ஆம் நாள் '' நாயகக் காதலர் தினம்'' அல்லவா? ( நன்றி எல் ஐ டி தமிழ்
இஸ்லாமிய மாத இதழ்) வெளியீடு தமிழ் இஸ்லாமிய இளைஞர் விழிப்புணர்வு
மையம்
புதன், 4 ஜனவரி, 2012
மத்ஹபுகளை குறை கூறலாமா ?
| |||
செவ்வாய், 3 ஜனவரி, 2012
வழி காட்டுகிறது கோவை -விழிப்படையுமா சமுதாயம் ? என்ற 2) ஆளூர் நவாஸ் எழுதிய கட்டுரைக்கு பதில்
வழி காட்டுகிறது கோவை -விழிப்படையுமா சமுதாயம் ? என்ற ஆளூர் நவாஸ் எழுதிய கட்டுரைக்கு
பதில்
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி கோவை
மாநகராட்சி யையும் முத்துப்பேட்டை பேருராட்சி
யையும் உதாரணம் காட்டி மாநில அளவில் முஸ்லிம்
களிடம் ஏற்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளர்சி கோவை
என்கிற அளவில்சுருங்கிப்போனது ஏன் என்றும் முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சிவேட்பாளர் போட்டியிடாமல் இருந்திருந்தால் எஸ் டி பி ஐ வெற்றி பெற்றிருக்கும் என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .நானும் இரண்டு பிரபல
ஊர்களில் தேர்தல் முடிவுகளை சமுதாயத்தின் சிந்தனைக்கு
வைக்கிறேன் . நாற்பதாயிரம் முஸ்லிம்கள்
வாழும் காயல்பட்டினத்தில்
மார்க்க ரீதியாக பிரச்சனைகள் ,
பிளவுகள் இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக தலைவர் தேர்தல் ஜமா அத் அடிப்படையிலலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு
வந்தது . இந்த ஆண்டும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய
பேரவை ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்களும் ஒருங்கிணைந்து
முறைப்படி தேர்வு செய்து நகராட்சி த் தலைவர் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை அறிவித்தனர் . இதை காங்கிரஸ் ,
அ தி மு க ,திமுக ,இ .யூ.முஸ்லிம் லீக் , விசி ,பாமக ,தேமுதிக , ஏன் பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளும்ஏற்று தங்கள் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அறிவித்து விட்டன .
அப்படியிருந்தும் சிலர் ஒரு வேட்பாளரை நிறுத்தி புறநகர்
பகுதிகளின் முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயமக்களின்
துணையோடு ஒரு வரை வெற்றி பெற வைத்தனர் . இதன் மூலம் ஐக்கிய ஜமாஅத் திற்கு தலைகுனிவு ஏற்பட்டு இனிவரும்
காலங்களில் ஜமாஅத் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதும்
தகர்க்கப்பட்டு விட்டது . ''' ஒட்டு மொத்த ஜமாஅத் வேட்பாளரை த் தோற்கடித்துஅவரை எதிர்த்து ப் போட்டியிட்டவரை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிரமாக ப் பணியாற்றினோம் ''' என மனித நேய மக்கள் கட்சி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளது
பார்க்க மக்கள் உரிமை ;; அக் டோபர் 28 நவம்பர் 3 , 2011 )
இது தான் ஜமாஅத் பெருமையை நிலை நாட்டுவதன்
அடையாளமா ? கோவையில் அப்படி ;காயல்பட்டினத்தில்
இப்படியா ? முத்துப்பேட்டையில் ம ம க போட்டியிட்ட
தால்எஸ் டி பி ஐ தோல்வி அடைந்து 384 வாக்குகள்
வித்தியாசத்தில் அருணாசலம் வெற்றி பெற்றுவிட்டார் என ஆதங்கபடுகிரார்கள் மேட்டுப்பாளையம் நகராட்சியை
பாருங்கள் . தமிழ் நாட்டில் முகவரி இல்லாத பிஜேபி இந்த
நகராட்சியின் ''தலைவர்'' பதவியை க் கைப்பற்றியுள்ளது .
மேட்டு பாளையத்தில் இதற்கு முன் காங் கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் .திமுக , காங்கிரஸ் கட்சியினர்
தலைவர்களாக இருந்துள்ளனர். இந்த முறை முதன் முதலாக திமுக தனது வேட்பாளராக அதன் நகரசெயலாளர் எம் அப்துல்
ஹமீதை அறிவித்தது .அ இ தி மு க நாசர் என்பவரை யும் ,
பா ம க தேமுதிக ஆகியவையும் முஸ்லிம்களையே தங்கள்
வேட்பாளர்களாக அறிவித்தன .சமுதாய அமைப்புகள் வார்டுகளில்
தனித்தனியாக போட்டி யிட்டு கடும் போட்டியை ஏற்படுத்தின
.. திமுக- அதிமுக தேமுதிக முறையே 9300 ,5850 , 1500 , என 17650 வாக்குகளை பிரித்தன பாரதிய ஜனதா கட்சி
வரலாற்றில் முதன் முறையாக 11000 வாக்குகளை
பெற்று வெற்றி பெற்றது முஸ்லிம் வாக்குகள் இப்படி பிரிய -கட்சி உணர்வையும் தாண்டி இந்துக்கள் ஒரு முகமாக பிஜேபிக்கு
வாக்களித்த தற்கு காரணம் என்ன தெரியுமா ? கடந்த
ஆண்டு இந்திய சுதந்திர தினத்தின் போது எஸ்டிபிஐ(பிஎப்ஐ )
நடத்திய அணிவகுப்பும் ஒரு காரணம் என்பது கசப்பானஉண்மை . முஸ்லிம் இளைஞர் களுக்குக் கட்டுப்பாடும் பயிற்சியும்
கண்டிப்பாகதேவை .ஆனால் அப்படி பயிற்சி பெற்றவர்களை
ஓர்இடத்தில திரட்டி மற்றவர்கள் அச்சப்படும் வகையில்
அணிவகுக்கச்செய்வது சமுதாயதிற்கு நன்மை பயக்க கூடியதா ?/
தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் பத்து சதவீதம் கூட இல்லை
இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவர்களை விட குறைவு இதை உணர்ந்து புத்திசாலி தனமாக அரசியலில் முடிவெடுப்பதே
சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்
காயல் மகபூப் மாநில செயலாளர் இ யூ முஸ்லீம் லீக்
செய்தி ஆசிரியர் மணிச்சுடர் நாளிதழ் சென்னை
நன்றி சம நிலை சமுதாயம் டிசம்பர் 2011 ௦
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)