சனி, 31 டிசம்பர், 2011

வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..
  
 ELLAA
புகழும் ஏகவல்ல றப்புல் ஆலமீனாகிய அல்லாஹு ஜல்ல ஷானுஹு வதஆலாவுக்கு உரியதாகும். ஸலவாத் எனும் கருணையும் ஸலாம் எனும் ஈடேற்றமும், ஈருலக இரட்சகர். எம் பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்)  அவர்கள் மீதும், அவர்களுடைய அன்புக்கிளைஞர்கள் மீதும் உத்தமத் தோழர்கள் மீதும் என்றென்றும்   நிலவுக.
      எம்பெருமானார் ரஸுலே கரீம் (ஸல்) அவர்கள். நஜ்தைக் குறிப்பிட்டு. இங்குதான் அதிர்ச்சிகளும். குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்துதான் ஷைத்தான் உடைய கொம்பு உதயமாகும். என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
 (மிஷ்காத் -ஸஹீஹ் புகாரி)

      
அவ்வாறாகவே சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும், அவருடைய மகன் முகம்மதும் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர் தான் மெளலவி இஸ்மாயில் திஹ்லவியும் அவரைச் சார்ந்தவர்களும். அக்குழுவினர் இரு பிரிவினராகப் பிரிந்தார்கள். வெளிரங்கமாகவே தங்களை வஹ்ஹாபிகள் என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர். அவர்கள் எந்த மதுஹபையும் ஏற்றுப் பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில்  தங்களை வஹ்ஹாபிகள் என்று காட்டிக் கொள்ளாமல் அந்தரங்கத்தில் வஹ்ஹாபிகளாக இருக்கக் கூடியவர்கள் மற்றக் குழுவினர். இவர்கள் ஹனபி - ஹம்பலி என்று வெளிக்கு மதுஹபுகளில் ஏதாவது ஒன்றினைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு முற்றிலும் வஹ்ஹாபிக் கொள்கைகளையே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட ""முகல்லிது'' வேடதாரிகள்.
      இவர்களில் முந்திய கூட்டத்தினரின் அபாயங்களைவிட பிந்திய இந்தக் கூட்டத்தார்களின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில். இவர்கள் மதுஹபு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு முஸ்லிம்களை வழி கேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது நயவஞ்சகத் தந்திர உபாயத்தினால் ஸுன்னத்து ஜமா அத்துடைய நல்ல கொள்கையில் ஆகி இருந்த அநேகர்களை பொல்லாங்குடைய வஹ்ஹாபிய்யத்தான வழிகேட்டின் அளவில் இழுத்துப்போட்டும் விட்டனர்.
தீய கொள்கைகள்
      வஹ்ஹாபிகளான அவர்களது கொள்கைக் கூற்றுக்களைப் பாருங்கள்:

*     முஹம்மது நபி (ஸல்) மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்டார்கள். அவர்களுடைய ரவுளாவுக்கு ஜியாரத்திற்காகப் போவது ´ஷிர்க்கு (இணைவைத்தல்) ஆகும்.

*     யாநபி! யாமுஹம்மது! யாரஸுலல்லாஹ்! என்று அழைத்துக் கூப்பிடுவது ´ஷிர்க்காகும். அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.
*     முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள். தொழுகையில் அவர்களுடைய ஞாபகம் வருவதானது மாடு. கழுதையின் ஞாபகம் வருவதைவிட மிகக்கெட்டதாகும். அவர்களுடைய முஃஜிஸாத்து (அற்புதச்சாதனை) களை விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்தது. அவர்கள் ­பாஅத்து (மன்றாட்டம்) செய்வார்கள் என்று நம்புவது ´ஷிர்க்காகும்.
*     நபிமார்கள். அவுலியாக்களின் கப்ரு (சமாதி)கள் புத்து(விக்கிரகங்)களுக்கு ஒப்பாகும். அவைகளைத் தகர்த்து எறிய வேண்டும். அவர்களுக்கு எத்தகைய சக்தியும் கிடையாது. அவர்கள் பால் வஸீலா (உதவி) தேடுதல் ´ஷிர்க்காகும். அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹறாமாகும்
*     சகல நபிமார்கள். ஸஹாபாக்கள் அவுலியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன்பு செம்மானைவிடக் கீழ்த் தரமானவர்கள்.
*     மீலாதுந் நபி (நபி ஜயந்தி) கிருஷ்ண ஜயந்திக்கு ஒப்பாகும்.  காதிரிய்யா, ஜிஷ்த்திய்யா. நக்­பந்திய்யா முதலான தரீக்காக்கள் வழிகேடானவை. மவுலிது, பாத்திஹா கத்தம் முதலானவற்றின் ஷீர்னி (வினியோகப் பொருள்) ஹராம் ஆகும்.
*      அவுலியாக்களின் பெயராலும் மவுத்தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாபு (புண்ணியத்தைச் சேர்ப்பித்தல்) செய்வது, பிராமணப் புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி சுலோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றேயாகும்.
      அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! மேற்சொன்னவைகளும், அவை போன்ற தப்புத் தவறான நூற்றக்கணக்கான கொள்கைகளும். வஹ்ஹாபிகளின் வழிகேடான அகீதாக்(கொள்கை) களாகும். இத்தகைய வழிகெட்ட கொள்கைகளின் பால் வஹ்ஹாபிய்ய மெளலானா மெளலவிகளும் மார்க்கத்தில் மறுமலர்ச்சி காண விரும்புவதாகச் சொல்லிக் கொள்பவர்களும், சமூகத்தில்  சீர்திருத்தம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களும், தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல். ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழி கெடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.
      நாயகம் (ஸல்) அவர்கள், இபுலீசை நஜ்து தேசத்து ஷைகு உடைய உருவத்திலே காண்பார்கள் என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.
      நஜ்து தேசத்து வஹ்ஹாபிஷ் ஷைகு உடைய ""கிதாபுத் தவ்ஹீது''வின் உர்து மொழி பெயர்ப்பு நூற்களாகிய தக்வியத் துல்-ஈமான் ""ஸிறாத்துல் முஸ்த்தகீம்''. ""இதுபாத்துத் தௌஹீது'' போன்ற ஆபாச மலக்குவியல்களிலிருந்து சிலவற்றைப் பொறுக்கி தௌஹீதோ இபாதத் என்ற பெயரால் வட நாட்டு வஹ்ஹாபி  மெளலவியொருவர் உர்துவில் அச்சிட்டிருக்கின்றார். அதை ""ஏகதெய்வ வணக்கம்'' எனும் நாமத்தால் தென்னாட்டு பாக்கவீ ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.  அதை மற்றொரு பீடி மெளலவி அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்துள்ளார்.
    
     மேலும் ""ஜியாரத்துல் குபூர்'' ""அவுலியாக்களை அவமதிக்காதீர்'' - மஹான் சாகுல் ஹமீது ""ஏக தெய்வ வணக்கம்'' முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்கள் அதிக வி­த்தையுடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்ற பெயர் உள்ளது போல - வஹ்ஹாபியத்தின் வி­வித்துக்களைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து ஷைத்தானிய்யத்தான பணியைத் தென்னாட்டில் செய்து வருகின்றன. இத்தகைய அகீதாக் கெட்டவர்கள் தங்களை வஹ்ஹாபிகள் - என்று சொல்லிக்கொள்வார்களானாலும் பரவாயில்லை. ஆனால், இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை  ஸுன்னத் ஜமாஅத்தார்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எனவேதான் இவர்களுக்கு எதிர்ப்பும் மறுப்பும் ஏற்படுகின்றன. உள்யளான்று புறம் ஒன்றாகயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள் என்று பகிரங்கமாக அறிவித்து  தங்களது வஹ்ஹாபிக் கொள்கைகளை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்கப் போகின்றார்கள்?
சான்றுகள்
      ""நபிமார்களின் சடலங்களை மண் தின்னாது'' என்பது நபி பெருமானார் (ஸல்) அவர்களது நல்வாக்கு.
      
     நபிமார்களுடைய பரிசுத்தச் சடலங்கள் சங்கையுடனும் வலுப்பத்துடனும் பாதுகாக்கப்பட்ட வி­யம்  குர்ஆன் ­ரீபுடைய ஆதாரங்கொண்டு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. 
     
     ஹஜ்ரத் ஸுலைமான் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களுடைய அஸாவை (ஊன்றுகோலை) ஊன்றிக்கொண்டு, பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை நிர்மாணிக்க ஜின்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலைமையில் அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. மவுத்தான நிலையிலும் அவர்களை அவ்வாறே ஊன்றுகோலின் பொறுப்பிலேயே நீண்டகாலம் வரையில் அந்தப் பள்ளிவாயிலின் நிர்மாண வேலை பூர்த்தியாகும் வரையில் ஆண்டவன் அப்படியே நிறுத்தாட்டிவைத்திருந்தான். அவர்களுடைய அஸாவை கரையான் அரித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசல் வேலையும் பூர்த்தியாயிற்று, கரையான் அரித்த அஸா நொடித்துப்போக அதன் மீது ஊன்றுதல் பிடித்து நின்றிருந்த, ஹஜ்ரத் ஸுலைமான் நபி (அலை) அவர்கள் கீழே சாய்ந்தார்கள். அவர்களுடைய சடலம் மவுத்திற்கு அப்பாலும் மாறுதலடையாமல் நீண்டகாலம் அப்படியே இருந்தது என்பதாய் குர்ஆன் ­ரீபு உடைய வசனம் (34:14) மூலம் தெரியவருகிறது.
      ஹஜ்ரத் உஜைர் நபி (அலை)அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள் என்பதாக குர்ஆன்ரீபு (2:259) வசனம் கூறுகிறது.
      ஹஜ்ரத் யூனுசு நபி (அலை) அவர்களை மீன் விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றிலேயே அப்படியே இருந்தார்கள் என்பதாகக் குர்ஆன்­ரீபு (37:142, 144) வசனம் மூலம் அறியமுடிகின்றது.  )               


 வஹாபிகள் சஹாபிய வேடங்களில்....
தொடர் எண்-2
         அமீருல் முஃமினீன், யஸய்யிதுனா உமர் பாரூக் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் துஸ்த்தர் கோட்டை பிடிபட்டது.  அங்கு  ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹஜ்ரத் தானியால்(அலை) அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தத் திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டமுள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமும் இன்றி அப்படியே இருந்ததாக ""அல்பிதாயா வன்னிஹாயா'' பாகம் 2-41 பகர்வதாய் அஸ்ஸயீது 4-வது ஆண்டு 3,4, இதழ் பக்கம் 72-73 அறிவிக்கின்றது. மேலும் இம்றானுல் குலூபு -115வது பக்கத்திலும் வஸீலா ஜலீலா 106வது பக்கத்திலும் காணலாம்.
ஆதாரங்கள்
      இவையன்றி, மையித்துக்களை அடக்கம் செய்யப்படும் கபுருஸ்தான்களில் குழிகள் வெட்டும் போது, எத்தனையோ பல்லாண்டு காலத்திற்கு முன்பு அடக்கப்பட்ட எத்தனையோ மய்யித்துக்களின் திரேகங்கள் அப்படியே  அழிவின்றி இருக்கக் காணப்பட்டுள்ளன.  இந்நிலைமையில் உலகத்திலுண்டான அத்தனை சிருஷ்டிக்கும் மூலக்கருவான எம்பெருமானார் நாயகம் (ஸல்) அவர்களை இறந்துபோய் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்று அச்சமின்றி துச்சமாகஓலமிடும் இந்த வர்க்கத்தார் இந்த அத்தாட்சிகளுக்கெல்லாம் என் சொல்வர்?
      முஃதஸிலாக்கள் வஹ்ஹாபிகள் உடைய குழாத்தினருள் ஒரு பிரிவினரான காதியானிகள், நபிமார்களின் முஃஜிஸாத்துகளையும், அவுலியாக்களின் கராமாத்துகளையும் இன்கார் (நிராகரிப்பு) செய்கின்றனர். வெளிரங்கமான உண்மைக்கு மாற்றமாய் அவர்கள் கூடார்த்தஞ் செய்கின்றனர். நபிமார்கள் செய்யும் அதிசயக் காரணங்களுக்கு ""முஃஜிஸாத்து'' என்று பெயர். அவுலியாக்களைக் கொண்டு நிகழும் அதே அற்புதத்திற்கு ""கராமத்து'' என்று சொல்லப்படுகின்றது. அற்புதங்கள் என்றாலே இயற்கைக்கு மாற்றம் என்று பொருள். ஆகவே அவை சாமானிய மனிதரின் புத்திக்கு எட்டாதவை என்று நன்கு விளங்க வருகிறது. குர்ஆன், ஹதீதைக் கொண்டு இவை உறுதிப்படுகின்றன.
ஹஜ்ரத் மூஸா நபி (அலை) அவர்கள் அஸாக் கம்பை பாம்பாக்கினார்கள். (7 : 117)
 ஹஜ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் மரணித்தவர்களை உயிர் பெறச் செய்தார்கள். களிமண்ணால் வௌவாலைச் செய்து பறக்க விட்டார்கள். (3:49)
 ஹஜ்ரத் ஸாலிஹ் நபி (அலை) அவர்கள் மலைக்குள்ளிருந்து பெண் ஒட்டகத்தை வெளியாக்கி அக்கணமே  அது கர்ப்பமுற்று குட்டி ஈன்றிடச் செய்தார்கள். 
இவை பற்றிய வரலாறுகளும், இவை போன்ற இன்னும் பல முஃஜிஸாத்துகளும் குர்ஆன் ­ரீஃபில் கூறப்பட்டுள்ளன.
      எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காண்பித்த எண்ணற்ற முஃஜிஸாத்துகளில் சந்திரன் பிளந்ததும் ஒன்று. இவ்வி­யத்தை குர்ஆன் ­ரீஃபு 54:1 வசனம் குறிப்பிடுகின்றது.
      மேலும் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹு முஸ்லிம், ஜாமிஉ திர்மிதீ, முவத்தா ஆகிய ஸஹீஹான ஹதீது கிரந்தங்களும், ஜலாலைன் ஹா´யா கமாலைன்,  மஆலிமுத் தன்ஸீல், பைளாவி, கபீர் முதலிய தப்ஸீர் கிரந்தங்களும், மற்றும் பல நூற்களும் விரிவுபடக் கூறுகின்றன.
      பிரயாணங்களிலிருந்து மக்காவுக்கு வந்தவர்கள் கூட அந்நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டதாக சாட்சி சொல்லியுள்ளார்கள். அவ்வாறெல்லாம் இருந்துங்கூட, நேரில் கண்ணுற்ற அபூஜஹல் வகையறாக்கள் அது சூனியச் செயல் என்று கூறி தள்ளிவிட்டார்கள். பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு அப்பாலுள்ள ஈமானில் பலமில்லாத ஒரு சிலர் அந்த முஃஜிஸாவை சந்திரகிரணம் என்று கூடார்த்தம் செய்வது ஆச்சரியமன்று.
      மலபார் அரசர் சந்திரன் பிளந்த அதிசயத்தைக் கண்டு, இஸ்லாத்திலானார் என்று தாரீக் - பிரிஷ்த்தாவின் ஆசிரியர் வரைந்துள்ளதாகவும், மாலூஹ்ராஜாதார் என்பவர் அவ்வற்புத நிகழ்ச்சியைப் பார்த்து மதீனாவுக்குத் தூதனுப்பி   முஸ்லிமானதாகவும், அவருக்கு நபிநாயகம் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் எனப் பெயர் வைத்ததாகவும், அவருடைய கபுரு இன்றும் அவ்வூரில் ஸியாரத்திற்குரிய தலமாக இருப்பதாகவும் ""ஸவானிஹுல் ஹரமைன் தாரீக் புலைலி''யில் எழுதப்பட்டிருப்பதாகவும் ""தப்ரீஹுல் அத்கியா ஃபீ அஹ்வாலில் அன்பியா'' பாகம் 2, பக்கம் 423 கூறுகின்றது.
      முன்சொன்ன மலபார் அரசர் சேரலாதப் பெருமான் எனத் தமிழ்நாட்டுச் சரித்திர ஆசிரியர்கள் சிலரும், பத்திரிகாசிரியர்கள் சிலரும்,  வரைந்துள்ளார்கள். 
இறந்தவர் எழுந்தார்
      மஃரிபத் மாலை, ஞானக் குறவஞ்சி, ஞானவிளக்கச் சரநூல், ஞான உலகஉருளை, ஞானமணிமாலை, ஞானப்புகழ்ச்சி, ஞானப் பூட்டுத்திறப்பு, பிஸ்மில்குறம் முதலிய அருமையான ஞானநூற்களைத் தந்தருளிய மாதவச் சிரேஷ்டர் ஆரிபுபில்லாஹ், அல்காமில், ஹஜ்ரத் தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு வலியுல்லாஹ் (ரலி) அவர்கள் காலத்தில் திருவனந்தபுரத்தை ஆண்டு வந்த முத்துச்சாமி தம்பிரான், பீர்முஹம்மது வலியுல்லாஹ் அப்பா (ரலி) அவர்களுடைய சகவாசத்தில் சிறிதுகாலம்இருந்து ஞானியாகிவிட்டார். அரச குடும்பத்தினர், அப்பா அவர்களைப் பெரிதும் கண்ணியப்படுத்தி மரியாதையோடு உபசரித்துக் கொண்டாடினார்கள்.
      அந்தச் சந்தர்ப்பத்தில் அரண்மனையில் திடீரென ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அடுத்த வாரத்தில் இளவரசராக  பட்டம் கட்டுவதற்காக நியமனஞ் செய்து வைக்கப்பட்டிருந்த அரசகுமாரனுக்கு  திடீரென நோய் உண்டாயிற்று.

எவ்வளவோ கவனங்கள் செலுத்தி  ராஜ வைத்தியங்கயளல்லாம் செய்தும் பயன் இல்லை. அந்த இளவரசன் உயிர் துறந்தான். அரச அவையும்  சமஸ்தானமும் துக்க சாகரத்தில்  ஆழ்ந்து போயின. அரசன் மிகவும் துடிதுடித்துக் கவலை தோய்ந்து போனான். தகனக் கிரியைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தச் சமயத்தில் பீர்முஹம்மது அப்பா அவர்கள் அரண்மனைக்குள் திடும் பிரவேசமாக நுழைந்தார்கள். அரச குடும்பத்தாரின் பரிதாப நிலைமையைக் கண்டு மனமிரங்கினார்கள்.
      முத்துச்சாமி தம்பிரானே! ஞானிகளுக்கு விசனம் வேண்டாம்! என்று அவர்கள் ஆறுதல் கூறினார்கள். இளவரசன் பிணமாகக் கிடந்த மாடத்திற்குள்ளே சென்று எல்லோரையும் போகச் செய்து. கதவை அடைத்துக் கொண்டு சவத்துடன் தனிமையாக இருந்தார்கள்.  சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா அவர்கள் சரீரம் முழுவதும் வியர்த்து வடிந்தவர்களாய், இறந்து போன இளவரசனை உயிர் பெற்றெழச் செய்து, தன்னுடன் ஒன்றாக அழைத்து வந்து, அரசனது கையில் ஒப்புவித்து, ""இனி நீ நம்மைப் பார்ப்பதரிது'' என்று கூறி மறைந்து விட்டார்கள். அப்பால் அரசர் தம்பிரான், அப்பா அவர்களைக் கண்டுகொள்வதற்கு எவ்வளவோ பிரயாசை எடுத்துத் தேடியும் அது கைகூடவில்லை.
      சற்றேறக் குறைய நூறு வருடங்களுக்குப் பிறகு அப்பா அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் முன்னூறு வருடகாலம், ஜீவித்திருந்ததாய் சரித்திரம்கூறுகின்றது. இவ்வரலாற்றை உரையுடன் கூடிய ஞானமணிமாலையில் ஜீவிய சரிதைப் பகுதியில் காணலாம்.
சிலைகளா? வலிகளா?
      அவுலியாக்களின் தர்காக்களுக்கு போகக்கூடாது; அவர்கள் இடம் வஸீலாத் தேடுவது ´ர்க்காகும் - புத்துகான்கள் (சிலைகள்) இடம் கேட்பதற்கு ஒப்பாகும் என்று வஹ்ஹாபிகள் கூறிக்கொண்டு குர்ஆன் ­ரீபின் ஸபபுன்னுஸூல், ­ஃனுன்னு ஸூல் (இடம், பொருள், ஏவல்) பற்றிய அறிவு ஞானம் கொஞ்சமும் இல்லாமல் புத்துகான்கள் சம்பந்தமாக இறங்கிய வசனங்களையும், 13:14-17: 57 - 22: 73 -25 : 3-29: 41, 42-39 : 3 போன்ற வசனங்களையும், மேலும், குர்ஆன் ­ரீபில் ""வலீ''' அவுலியா என்ற பதங்கள் காணப்படும் வாக்கியங்களையும் குறிப்பிட்டு ஆதாரங்களாகக்  காட்ட முன் வருகிறார்கள். இக்குழாத்தினரின் அஞ்ஞானத்தை என்னென்று இயம்புவது!
      அல்லாஹூத்தஆலா தன்னையும், ரஸூல் (ஸல்) அவர்களையும், முஸ்லிம்களையும் வலி என்பதாய்த் தனது புனிதத்திருமறையில் சொல்லி இருப்பதுடன், எஹூதி, நஸாறா, காபிர், இபுலீஸ், ஷைத்தான் மற்றும் விக்கிரகங்கள், கிரகங்கள், நெருப்பு முதலிய இலாஹூல் பாத்தில் (பொய்த்தெய்வம்) வி­யத்திலும் குர்ஆன் ­ரீஃபில் எத்தகைய கருத்தில் கூறப்பட்டிருக்கின்றன என்பதை 5: 55, 5:51, 3: 27, 18: 50, 7:3, 7:30 ஆயத்துக்களைக் கொண்டும், இவை போன்ற வேறு ஆயத்துக்களைக் கொண்டும் நன்கு அறியலாம். ஆகவே வலி அவுலியா எனும் பதங்கள் சந்தர்ப்பத்திற்குத் தக்க பலரைக் குறிக்கக் கூடியது என்பதையும் உற்றுணர்க!
      மேலும் அன்பியா, அவுலியாக்களை விளித்து (அழைத்து) உதவி யயாத்தாசை தேடக்கூடாது என  ஆட்சேபித்து 7:194, 10:106. 13 : 14, 17 : 57, 22: 73, 29: 42 மற்றும் இவை போன்ற ஆயத்துக்களையும் வஹ்ஹாபிக் கூட்டத்தினர் மேற்கோளாகக் காட்டுகின்றனர். இவையனைத்தும் புத்துகள் (சிலைகள்) முஷ்ரிக்குகள் சம்பந்தப்பட்டவையே. அன்பியா அவுலியாக்களுக்கும், அஸ்னாம்களாகிய விக்கிரகங்களுக்கும் இடையே உள்ள தாரதம்மியம் அறியாத இக்குழுவினரின் பேதைமையை என்னென்போம்! அவர்களது இருதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் எனும் குர்ஆன் ­ரீஃபு வாக்கியம் இவர்களுக்கே முற்றும் பொருந்தும் எனலாம். 
      மேற்கண்ட ஆயத்துக்களில் வரும் அரபிப் பதங்களான துஆ - அத்ஊ -தத்ஊ - யத்ஊன என்பனவற்றிற்கு இரு விதங்களில் அர்த்தமுண்டு. சாதாரணமாக   விளித்தல், கூப்பிடுதல் என்ற அர்த்தம் ஒரு  விதம். வணங்குதல் பூஜித்தல் என்ற அர்த்தம் மற்றொரு விதம். மேற்சொன்ன ஆயத்துக்களில், இவற்றிற்கு ""இபாதத்து'' எனும் வணங்குதல், உடைய அர்த்தத்தை குறிப்பதாகவே உலமாக்கள் அனைவரும் கூறுவதுடன், அவை விக்கிரகங்கள் சம்பந்தப்பட்டவையே எனவும் சொல்கின்றார்கள்.
      எந்த முஸ்லிமும் கப்ருகளை வணங்குவதுமில்லை; பூஜிப்பதுமில்லை. வஸீலாவை முன்னிட்டு அன்பியா அவுலியாக்களை விளித்துக் கூப்பிட்டுவது ஒரு போதும் இபாதத்து எனும் தெய்வ வணக்கமாகாது.
      காபிர்கள் அளவில் இறங்கிய ஆயத்துக்களை முஸ்லிம்கள் அளவில் காரிஜிய்யாக்கள் மாற்றிச் சாட்டியதின்  காரணமாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி) அவர்கள் ஆண்டவனுடைய சிருஷ்டிகளில் எல்லாம் மிகக் கெட்ட சிருஷ்டியாக காரிஜிய்யாக்களை கணித்தார்கள் என்பதாக இக்குழுவினர் பற்றிய ஹதீது ஒன்று ஸஹீஹுல் புகாரி ஹதீதில் காணப்படுகின்றது.      
 வஹ்ஹாபிகள் சஹாபிய வேடங்களில் இக்குழுவினரின் கூற்றுப்படி அன்பியாஅவுலியாக்கள் பால் வஸீலா தேடுங்கள் என்று  வந்திருக்காது. எந்தவொரு கருமத்தைக் கொண்டோ வஸ்துவைக் கொண்டோமனிதரைக் கொண்டோ உதவி தேடுதல் உள்ரங்கத்தில் அல்லாஹ்விடத்திலேயே தேடிய உதவி உதவியாகும். உதவி தேடலின் கருத்து இது வல்லவெனின்ஒவ்வொரு வினாடியும்´ர்க்கெனும் பாதாத்தில் விழநேரிடும். உதவி தேடலாம் என்பதற்குக் குர்ஆன்ரீபிலும்ஹதீது sa­ரீபிலும் ஆதாரங்கள் பலகொண்டும்,பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என குர்ஆன் (2:153) கூறுகிறது.நபி ஈஸா (அலை) அவர்கள்,இக்கட்டான நேரத்தில்தமது தோழர்களைநோக்கி, (மன் அன்ஸாரீ இலல்லாஹி) அல்லாஹ்வின் சார்பில் எனக்கு உதவியாராக இருப்பவர்கள் யார்என்று கேட்டது பற்றி குர்ஆன் ­ரீபு (3:52) எடுத்துரைக்கிறது.துல்கர்கனைன் (அலை) அவர்கள் பாஷையறியாத ஒரு கூட்டத்தாரிடம்யாஜுஜ்மாஜுஜ் கூட்டத்தாரைத் தடை செய்து சுவர் எழுப்ப,உங்களுடைய உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள் என்பதாக உதவிதேடியிருக்கும் செய்தியை குர்ஆன் ­ரீபு (18:95) குறிப்பிடுகிறது. nabi சுலைமான் (அலை) தமது பிரதானிகளிடம்தலைவர்களே, பல்கீஸ் உடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்என்று ஆஸிப்- பின்-பர்கியா உடைய ஒத்தாசையைத் தேடிப் பெற்ற சேதியை குர்ஆன் ­ரீபு (27:38) எடுத்துச் சொல்லுகிறது.மேல்கூறப்பட்ட தொழுகை,பொறுமைதோழர்உழைப்புஆஸிப் ஆன அனைத்தும்  அல்லாஹ்வாஎன அந்தக் குழுவினரிடம் கடாவுகின்றோம். அல்லாஹ்வன்றி எக்கருமத்திலும் எந்த நபியிடமும்வலியிடமும் உதவி தேடவே கூடாது. அவ்வாறு தேடுபவன் முஷ்ரிக்காவான் என்று ஓலமிடும் அந்த வகுப்பார் இதற்குப் பதில் கூறட்டும்!ஆண்டவனே நேரில் பிரசன்னமாகி எந்தக் கருமத்தையும் செய்வதில்லைபிறர் மூலமாகவே உதவியளிக்கின்றான். எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போரில் மலாயிக்கத்துக்களாகிய அமரர்கள் மூலம் உதவி புரிந்துள்ளான். பனீ இஸ்ராயில்களின் நபிமார்களுக்குசில நபிமார்களுடைய ஞாபகார்த்தச் சின்னங்களைக் கொண்ட ""தாபூத்ஸகீனா'' வெனும் பெட்டியைக் கொண்டு யுத்தங்களில் வெற்றிகளைக் கொடுத்துள்ளான். இவ்வாறே அவுலியாக்கள் மூலம் ஆண்டவன் உதவியுபகாரம் புரிந்து தனது கிருபா மாரியைப் பொழிகின்றான் IMAAMஅஹ்மத் இபுனு ஹன்பல் (ரஹ்) அவர்கள் பகுதாதிலிருந்து மக்காவுக்குச் சென்று கொண்டிருக்கையில் வழிதவறிவிட்டார்கள். பாதை  தெரியாமல் பிரயாணக் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டார்கள். அப்போதுஅவர்களுக்கு யா இபாதல்லாஹி அயீனூனீ என்னும் ஹதீது ஞாபகம் வந்தது. உடனேஎந்த விதம் பயன் பெற்றார்கள். அவர்களேதங்கது வாயால் கூறுவதைப் பாருங்கள்.அல்லாஹ்வின் நல்லடியார்களே! என்னைச் சரியான பாதையிலே கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள் என்று சப்தமிட ஆரம்பித்தேன்.  சரியான பாதை வந்தடையும் வரை இவ்வாறு நான் கூறிக்கொண்டே இருந்தேன் என்பதாக அவர்கள் தங்கள் பிரயாணக் கஷ்டம் பற்றி சொல்லிவரும் விபரத்தை அவர்களுடைய சரித்திரத்தில் காணலாம். மெலவி அப்துல் வஹ்ஹாப் அவர்கள்  இயற்றியுள்ள ""நன்மணி நால்வர்'' என்ற நூலின் 137-வது பக்கத்திலும் இவ்விபரம் காணலாம்.யாதொரு பொருள் காணாமல் போய் அது திரும்பக் கிடைக்கவேண்டுமானால்உயரமான ஓரிடத்தில் கிபுலாவை முன்னோக்கி நின்று கொண்டு பாத்திஹா ஓதிநபி கரீம் (ஸல்) அவர்களுக்குக் காணிக்கையாக வைத்து. அதனுடைய தவாபை யஸய்யிது அஹ்மதுஇபுனு அலவான் (ரலி) அவர்களுக்குச் சமர்ப்பித்துயஸய்யிது அஹ்மது இபுனு அலவான் (ரலி) அவர்களே!காணாமல் போன என்னுடைய பொருளைநீங்கள் திரும்பக் கிடைக்கச் செய்தால் நல்லதுஇல்லாவிட்டால் அவுலியாக்களின் பட்டியலிலிருந்து உங்களுடைய பெயரை நீக்கிவிடுவேன் என்று கூறவேண்டும் இவ்வாறு செய்வது கொண்டுஅந்த வலியின் பரக்கத்தால் காணாமல் போன அந்தப் பொருளை ஆண்டவன் திரும்பக்கிடைக்கச் செய்வான் என்பதாக,பிரபல ஹனபி பிக்ஹு கிதாபாகிய றத்துல் முஹ்தார் பாகம் 3-பக்கம் 334 ஹா´யாவில் அல்லாமா இமாம் இபுனு ஆபிதீன் (ரஹ்) அவர்கள் வரைகின்றார்கள்.வர்த்தகக் கூட்டமொன்று வியாபாரத்தை முன்னிட்டுப் பிரயாணப்படுவதற்கு முன்புஷைகு அபுல்ஹஸன் கிர்கானீ (ரலி) அவர்கள் பால் சென்றுதாங்கள் போகும் பாதை பயங்கரமானதால்பத்திரமாகப் போய்வர துஆ செய்து ஆசீர்வதித்து அனுப்பும்படி வேண்டினர். உங்களுக்கு ஆபத்து நேரிடின் அபுல்ஹஸனை ஞாகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிப் பயணமனுப்பி வைத்தார்கள். இவ்வார்த்தை அந்த வர்த்தகக் கூட்டத்தாருக்கு ஒரு மாதிரியாக,பொருத்தக் கேடாக இருந்தது. PAYAணத்தில் அவர்கள் போய்க் கொண்டிருக்கையில். ஒரு நாள் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களை வழி மறித்துப் பொருள்களைச் சூரையாடினர். வர்த்தகர்களில் ஒருவர் மட்டில் ஷைகு அபுல் ஹஸன் கிர்கானீ (ரலி) அவர்களைவிளித்து  உதவி தேடினார். பொருளுடன் அவர்கொள்ளைக் கூட்டத்தாரின் பார்வையை விட்டும் தப்பினார். மற்றவர்கள். ஆண்டவனை விளித்து உதவி தேடினர்.  அவர்களுடைய பொருள்கள் அனைத்தும் சூரையாடப்பட்டன, எல்லோருடைய பொருளும் கொள்ளை போயிருக்க ஒரே வொருவருடைய பொருள் மாத்திரம் தப்பிப் பத்திரமாக இருப்பதை யயண்ணி வர்த்தகர்கள் பேராச்சரியப்பட்டு ய­ய்கு அவர்கள் பால் மீண்டனர்.கூப்பிட்டு உதவி தேடினோம். பொருளையிழந்தோம். ஒருவர் மட்டும் உங்களைக் கூப்பிட்டு உதவி தேடினார். அவருடைய பொருள் பாதுகாக்கப்பட்டது. இதன் காரணத்தை தயவு கூர்ந்து தெரிவிக்க வேண்டும் என்பதாய் வரலாற்றைக் கூறி முறையிட்டனர்.நீங்கள் அல்லாஹ்வை அறியாதுவாக்குமனம் வேறுபட்டு வெறுமனே அவன் பால் உதவி தேடினீர்கள். அபுல்ஹஸனோ அல்லாஹ்வையறிந்து,வாக்கு மனம் ஒன்றுபட்டு அவன்பால் உதவி தேடினார். அபுல்ஹஸனை ஞாபகப்படுத்தி உதவி தேடினால் உங்களுக்காக அபுல்ஹஸன் அல்லாஹ்வின் பால்  உதவி தேடுவார். அவ்வமயம் உங்கள் கருமம் நிறைவேறும். நீங்கள் அல்லாஹ்வை அறியாத புறத்தில்என்றும் அவனைக் கூப்பிடும் வழக்கம் போல் ஆயிரம் முறை அழைத்தாலும் யாதொரு பயனுமில்லை என்பதாக ய­ய்கு அபுல்ஹஸன் கிர்கானீ (ரலி) அவர்கள் அறிவுறுத்தினார்கள் என்ற சரித்திர உண்மை ""மிர்ஆத்துல் கவுனைன்'' என்ற நூலின் 244-வது பக்கத்தில் சொல்லப்படுகின்றது.மேலும்­ய்கு பரீதுத்தீன் அத்தாரி (ரஹ்) அவர்களும் தங்கது ""ததுகிரத்துல் அவுலியா'' என்ற நூலிலும் இவ்வரலாற்றை எடுத்துரைத்துள்ளார்கள்.குத்பு யஸய்யிது ­ம்சுத்தீன் முஹம்மது ஹனபி (ரலி) அவர்கள்தங்கள் முரீதுடன் கடற்கரைக்குச் சென்று. கடலில் தண்ணீர்மேல் நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். "யாஹனபீஎன்று தன்னைக் கூப்பிட்டுக் கொண்டே நடக்கும்படி முரீதுக்கு ஆக்ஞாபித்தார்கள். இருவரும் தண்ணீர் மேல் நடந்து சென்று கொண்டிருக்கையில்  "யா அல்லாஹ்'என்று ய­ய்கு ஹனபி அவர்கள் சொல்லிக் கொண்டு போவதைச் செவியேற்ற முரீது,யாஹனபீ என்னும் சொல்லை விடுத்து,தானும் யாஅல்லாஹ் எனக் கூறவே,கடலில் முரீது தாழ்ந்துவிட்டார். ஷைகு,அவரின் கையைப் பிடித்துத் தூக்கி என்ன சொன்னீர்?  என வினவினார்கள்.  தாங்கள் யா அல்லாஹ் எனக்கூறியதைக் கேட்டு நானும் யா  அல்லாஹ் என மொழிந்தேன். உடனே தாழ்ந்து விட்டேன் என்றார். நீவிர் ஹனபியையே அறியாதிருக்கையில் அல்லாஹ்வை எங்ஙனம் அறிவீர்?அல்லாஹ்வையறிந்து சொன்னால் தாழ்ந்திருக்கமாட்டீர். அல்லாஹ்வை யறியாமல் கூப்பிட்டதால் தாழ்ந்தீர் என்பதாய் அறிவுறுத்தினார்கள் என்ற வி­யம் ""­வாஹிதுல் ஹக்''கில் கூறப்படுகிறது.ஒவ்வொரு காலத்திலும்நபி (ஸல்) அவர்களுக்கு முன்னும் சரி,பின்னும்சரிகௌது அல்லது குத்புல் அக்தாபு உண்டு. அல்லாஹ்வின் பார்வை அவர்களை நோக்கியவண்ணமாகவே இருக்கின்றது. அவர்கள் இருக்கும்வரை பிரபஞ்சம் அழிவதில்லை. அவர்களைக் கொண்டே அல்லாஹுத் தஆலா உலகத்தையும் சிருஷ்டிகளைம் பாதுகாத்து வருகிறான் என்று ஷைகுல் அக்பர் யஸய்யிதுனா முஹிய்யித்தீன் இபுனு அரபி (ரலி) அவர்கது புஸூஸுல்ஹிகமின்ரஹில் சொல்லப்படுகிறது.  AAHAIYAALதில் தேவையைப் பூர்த்திசெய்யக் கூடிய தோற்றமிருக்கின்றதோ அவ்விடத்தில் தெய்வீகத் தோற்றமிருக்கின்றது,நேர்மையான எத்தகையை தேவையானாலும் சரிதேவையுள்வன்,தேவை நிறைவேறக்கூடிய விடத்தில் உதவி தேடுவானாயின்எதார்த்தத்தில் தெய்வ சமூகத்திலேயே உதவி தேடுகின்றான் அல்லாஹ் செய்யும் உதவிக்கு "ஹகீகீஎன்றும். அவுலியாக்கள் புரியும் உதவிக்கு "மஜாஸிஎன்றும் சொல்லப்படும். குர்ஆன்ஹதீதைக் கொண்டு "இஸ்தி ஆனத்மஜாஸீ'ஆகுமானதாகும். எனவே அன்பியா அவுலியாக்களிடமும்சர்வ சாதாரணமாக நமக்கிடையே ஒருவருக் கொருவரிடமும் உதவியானமஜாஸிய்யான இந்த இரவல் உதவிஎதார்த்தத்தில் அல்லாஹ்வின் பால் தேடும் உதவியேயாம். உள்ரங்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவே செயல் மூலமாகவும்வஸ்து மூலமாயும் மனிதர் மூலமாகவும் உதவி புரிகிறான் என்ற எண்ணத்திற்கு முரண்பட இருக்குமாயின் ஷிர்க்காகும்.செயல்கயல்லாம் எண்ணத்தை (நிய்யத்தை)ப் பொறுத்தே இருக்கின்றன. ஹள்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் ஸாஹிப் முஹத்திதுத் திஹ்லவீ (ரஹ்) அவர்கள்  இப்பொருள் படவே தப்ஸீர் பத்ஹுல் கதீரில் கூறுகின்றார்கள்.மேலும்அன்பியா அவுலியாக்கள் பால் உதவி தேடும் சம்பந்தமாய் எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ன. நியாய புத்தியுள்வர்களுக்கு இரண்டொரு சான்றுகளே போதுமானவை. சண்டிகளுக்கு எத்தனை அத்தாட்சிகள் காட்டினாலும் பயனில்லாமலாகிவிடும். வாதத்திற்கு மருந்துண்டு. ஆனால் பிடிவாதத்திற்கு மருந்தில்லை. பிடிவாதம் சத்தியத்தை ஏற்காது. இக்கருத்துப்படவே,´ஃஅத்துல் லம்ஆத்தர்ஜமா மிஷ்காத்தில் ஷைகுல் ஹிந்து ஹள்ரத் ஷாஹ் அப்துல்ஹக் முஹத்திதுத் திஹிலவி (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள்.அவுலியாக்களின் தர்காக்களுக்கு ஜியாரத்திற்குப் போகக் கூடாதென நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக வஹ்ஹாபிக் குழுவினர் "மன்ஸூக்ஆக்கப்பட்ட ஒரு ஹதீதை                  ஆதாரமாகக் கூறுவது அவர்களின் அறியாமையேயாகும் SAHEEH MUSLIM.   அபுதாவூதுநஸயீ முதலிய ஸஹீஹு கிரந்தங்களிலும் மிஷ்காத்து ­ரீபிலும், ""கபுருகளை ஜியாரத்துச் செய்வதை நான் ஏற்கனவே உங்களுக்கு விலக்குதல் செய்திருந்தேன். இப்போது அவற்றை ஜியாரத்துச் செய்யுங்கள்'' என்பதாக இபுனு மஸ்வூது (ரலி) அவர்களைக் கொண்டு ரிவாயத்து செய்யப்படும் ஹதீது காணப்படுகின்றது. இதனால் முந்தின விலக்கல் மன்ஸூகு ஆக மாற்றப்பட்டு பிந்தின ஏவல் (பஸூரூஹா),  ""இப்போது அவற்றை ஜியாரத்துச் செய்யுங்கள்'' என்று அறிவிக்கப் பட்டிருப்பதை அக்குழுவினர் அறியாமல் போனதேனோ!அந்த நபிமணி (ஸல்) அவர்களே உதவி தேடும்படியும்ஜியாரத்துச் செய்யும்படியும் கட்டளையிட்டுள்ளார்கள். கருமங்கள் உங்களை இயலாமையிலாக்குமாயின்,கப்ரையுடையவர்களை (குத்புமார்கள்,அவுத்தாதுகள்அப்தால்கள் போன்றவர்களை)ப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அந்தக் கபுருகளைஜியாரத்தும் செய்யுங்கள்      எனும் ஹதீதுஇமாம் தைலமி (ரஹ்) அவர்களின் முஸ்னதுல் பிர்தவுஸில் கூறுவதாக இமாம் மனாவீ (ரஹ்) அவர்கள் "குனூஸுல் ஹகாயிகி பீஹதீதி கைரில் கலாயிக்என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இதுபோன்ற பல ஹதீதுகள் இச்சிறிய நூலில் மின்னிக் கொண்டிருக்கின்றன..."அல்லாஹ்வினபேரால்தான்நேர்ச்சை
செய்யவஅல்லாஹ்வல்லாதஅன்பியாக்கள்அவுலியாக்கள் பேரால்நேர்த்திக்கடன்செய்வதுமுஷ்ரிக்கீன்கள் தங்கதுதெய்வங்களாகிய விக்கிரகங்களுக்குச்செய்வதற்கு ஒப்பாகுமாகையால்ஹறாமாகும்'' என்று அறியாத்தன்மையில்சிலர் கூறுகின்றனர்.நேர்ச்சை இருவகைப்படும். அல்லாஹ் பேரால் செய்வது ஒருவகை,இதற்கு பிக்ஹீ என்று பெயர். இதை ஏழை. எளியார்களைத் தவிர மற்றவர் உண்ணுதல் ஆகாது. ANBIYAAKKALஅவுலியாக்கள் பேரால் செய்வது மற்றொரு வகை. இதற்கு  "உர்பீஎன்று பெயர். இதை ஏழை,எளியார் முதல் சீமான்கோமான் வரை எவரும் தாரமாக உண்ணலாம்.பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்த போதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்த்திக்கடன் செய்த போதிலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் நன்கறிகின்றான். (நேர்த்திக் கடன் செய்தபின் அதை நிறைவேற்றாத) அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோரில்லை என்பதாகக் குர்ஆன் ­ரீபு (2:270) கூறுகின்றது.  SAHLUஸஃது (ரலி) அவர்களைக் கொண்டு அறிவிப்பு (ரிவாயத்) செய்யப்படுகின்றது:   SADHU   அலி (ரலி) அவர்கள் யஸய்யிதத்துனா பாத்திமா (ரலி) அவர்களிடத்திற்கு வந்த போதுபாத்திமா நாயகி (ரலி) அவர்கள்தீனார் காசைக் கொடுத்து இன்ன எஹூதியிடம் சென்று மாவு வாங்கி வரும்படியாகச் சொன்னார்கள். அலி (ரலி) அவர்களும் அவ்வாறே அந்த எஹூதியிடம் சென்று தீனாரைக் கொடுத்து மாவை வாங்கினார்கள்.தாம் நபியயனக் கூறுகின்றார்களே அவர்கது மருகரா நீங்கள்என வினவினார் அந்த எஹூதி.ஆம்!   என்றார்கள் அலி (ரலி).பணத்தைத் தாங்கள் திரும்பப் பெற்றுச் செல்லுங்கள் அந்த நபியவர்களுக்கு மாவை நேர்ச்சையாக எடுத்துச் செல்லுங்கள் என்பதாய் அந்த எஹூதி கூறினார்.இந்த ஹதீது அபுதாவூது கிரந்தத்தின் 438-ஆவது பக்கத்தில் காணக்கிடக்கின்றது.  ஹள்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிபு முஹத்திதுத் திஹ்லவீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.என் தந்தையவர்கள் டாஸ்னா என்ற ஊரில் அடங்கியிருக்கும் மகுதூமுல்லாஹ் தாத்தாஹ் (ரலி) அவர்களுடைய ஸியாரத்திற்காகச் சென்றிருந்தார்கள். இரவாக இருந்தபடியால் மகுதூமுல்லாஹ் தாத்தாஹ் (ரலி) அவர்கள் நமக்கு விருந்தளிப்பார்கள்நாம் உண்டு மகிழ்வோம் என்று கூறி தன்கூட வந்தவர்களுடன் அங்கு தங்கி விட்டார்கள்.ஜனசஞ்சாரம் எதுமில்லாத அந்நேரத்தில் ஒருபெண் பாச்சோறு. Uர்னி ஆகியவற்றுடன் நிரம்பிய ஒரு தட்டையைத் தலை மீது சுமந்து கொண்டு வந்தாள். எந்தச் சமயத்தில் என் கணவர் என்னில்லம் வந்து சேர்வாரோ அதே சமயம் மகுதூ முல்லாஹ் தாத்தாஹ் (ரலி)  அவர்களது தர்காவிலிருக்கக் கூடியவர்களுக்கு நான் பாச்சோறு Uர்னி தயார்செய்து கொடுப்பதாக நேர்த்திக்கடன் செய்திருந்தேன். இவ்வேளையில் என்  புரு­னார் வந்து சேர்ந்து விட்டாராகையால். எனது நேர்ச்சையை நிறைவேற்றுகிறேன். என்று கூறினாள் என்னும் வரலாற்றை ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிபு (ரஹ்) அவர்கள் அன்பாஸுல் ஆரிபீன் 45ஆவது பக்கத்தில் வரைகின்றார்கள்.பெரியார்கது பாத்திஹா,கத்தம் இவற்றிற்காகஅன்னார்கது   ஆத்மாக்களுக்கு அவற்றிற்குரிய நன்மையைச் சேர்ப்பித்து வைக்கும் எண்ணத்துடன்மலீதா மாவுபாச்சோறு முதலானவற்றைச் சமைத்து உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை.ஆண்டவன் பேரால் நேர்ச்சை செய்யப்பட்டவைகளைசெல்வந்தர்கள் உண்பது ஹலால் அல்ல,ஆனால் பெரியார்களின் பெயரால் பாத்திஹா ஓதப்பட்ட Uர்னி வகையறாக்களை செல்வந்தர்களும் தின்பது ஆகுமானதே என்பதாக மெலானா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத்திஹ்லவி (ரஹ்) ""ஜுப்ததுந் நஸாயிஹி''ல் கூறுகின்றார்கள்.ஷைகு ஷாஹ்ஹஸன் அலி அஸீமாபாதீ (ரலி) அவர்கது சமூகத்தில் தனக்குக் குழந்தை உண்டாக துஆச் செய்யும்படியும், அவர்களுக்கு 500 திர்ஹம் நேர்ச்சை செய்திருப்பதாகவும் மீர் ஜாபர் முஸப்பர்பூரி என்பவர் முறையிட்டுக் கொண்டார். ஷைகு அவர்கள் துஆபரக்கத்துக் கொண்டு அவருடைய மனைவி கர்ப்பமானார். ஒன்பது மாதங்கழித்து  பிரசவ வேதனை உண்டாயிற்று. குழந்தையின் தலை மாத்திரம் வெளியே காணப்பட்டது. ஆனால் பிரசவமாகாமல் அந்தப் பெண் அதிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். ஷைகு அவர்களுக்கு நீர் வாக்களித்த நேர்ச்சையை நிறைவேற்றாத காரணத்தாலேயே பிரசவமாகாமல் கஷ்டம் ஏற்படக் காரணமாக இருக்கலாம். ஆகையால் நேர்த்திக் கடனை உடனே நிறைவேற்றும் என்று மீர் ஜாபரிடம் அவரது நண்பர் கூறினார்.வஹாபிகள் சஹாபிய வேடங்களில்....

 
      அல்லாஹ் எனக்குக் குழந்தையைக் கொடுத்தான்எவருடைய துஆவைக் கொண்டும் ஆவதென்னஎன்பதாய் மீர் ஜாபர் இறுமாப்புடன் சொன்னார்.
      இவ்வி­யம் ஷைகு அவர்களுக்குத் தெரிய வந்ததுஅவர்கள் சக்திமயமான ஜலாலியத்திலானார்கள்கொடுக்க வல்லமையுடைவனுக்கு எடுத்துக்கொள்வும் வல்லமையுண்டு எனக் கூறினார்கள்அந்த வினாடியிலேயே குழந்தை வயிற்றிலிருந்து மாயமாக மறைந்து விட்டதுகர்ப்பத்தின் அறிகுறியே இல்லாமலாகிவிட்டதுஇவ்வற்புத வரலாறு மிர்ஆத்துல் கவுனைன் 442ஆவது பக்கத்தில் வரையப்பட்டுள்து.
      இவற்றைக் கொண்டுநேர்த்திக்கடன் செய்வது ஜாயிஸ் ஆகுமானது - அவ்வாறு செய்யப்படும் நேர்ச்சையை தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் அறியக்கிடைக்கின்றது.
      கடைசிகாலத்தில் ஒரு கூட்டமுண்டாகும்அவர்கள் சிறியவர்களாகவும் அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள்.ஹதீதுகளையோ பெரியோர்களின் பேச்சுக்களையோ பேசுவார்கள்குர்ஆன் ஓதுவார்கள்ஆனால் அவர்களுடைய ஈமான் அவர்கது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது.வில்லில் இருந்து அம்பு  வெளியே பாய்ந்து செல்வது போல அவர்கள் சன்மார்க்கத்திலிருந்து வெளியே அகன்று போய் கிடப்பார்கள் என்ற கருத்துப்பட யஸய்யிதுனா அலீ (ரலிஅவர்கள் அறிவிக்கும் நாயக வாக்கியம் (ஹதீது)ஸஹீஹுல் புகாரிஸஹீஹு முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
      நபி (ஸல்அவர்கது இந்தத் திருவாக்கு இக்காலத்திலுள்காரிஜிய்யார்கள்
வஹ்ஹாபிகள்நஜ்திகள் முதலானவர்களுக்கும்ஸுன்னத் வல்ஜமாஅத்து என்று வாயவில் சொல்லிக்கொண்டு வஹ்ஹாபிகள் கொள்கைகளைப் பரப்பி வருகின்ற வழி கெட்ட ஒருசில உலமாக்களுக்கும் மிகமிகப் பொருத்தம் என்பதில் ஐயமில்லை.
      பிற்காலத்தில் உண்டான மேற்சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் குர்ஆனை ஓதத்தான் செய்கின்றனர்.ஆனால் இவர்களுக்கு ஈமான் அமைவதில்லைஇத்தகையவர்கள் முனாபிக்குகளை விடக் கொடியவர்கள்.
      மேலும்அபூஹுரைரா (ரலி)
அறிவிக்கின்றார்கள்.  நாயகம் (ஸல்)அவர்கள் அருள் செய்துள்ளார்கள்.
      எனது பிற்கால உம்மத்துக்களில் சிலர் ஏற்படுவார்கள். (மற்றொரு ரிவாயத்து - திர்மதியில் வருகிறது.அதிகமாகப் பொய்யர்களும்,ஏமாற்றுக்காரர்களும் ஏற்படுவார்கள்.கேள்விப்பட்டிராத செய்திகளை எல்லாம் அவர்கள் கூறுவார்கள்கிட்டே நெருங்கவிடாமல் ஜாக்கிரதையாக அவர்களை விட்டும் நீங்கள் விலகி அகன்று விடுங்கள்இல்லாவிடில் அவர்கள் உங்களை வழி கெடுத்து பித்னாக் குழப்பத்திலாக்கிவிடுவார்கள்அதற்கிடங் கொடுக்காமல் அவர்களைத் தூரவிலக்கி விடுங்கள்.
      ஸஹீஹு முஸ்லிமில் வருகின்ற இந்த ஹதீதின் மூலம் நாயகம் (ஸல்)அவர்கள் முழுமோசமுடைய வஹ்ஹாபிகளைப் பற்றி நாம் சர்வஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும் என்பதை முற்கூட்டியே அறிவித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
      வஹ்ஹாபிக் கூட்டத்தார்கள்நாமும் நம்முடைய முன்னோர்களும் கேள்வியுற்றிராத ஆபாச வி­யங்களைஎல்லாம் அக்குழுவினர் மார்க்கத்தின் பெயரால் சொல்லிக் காட்டுவதை காதால் கேட்கிறோம்கண்ணால் பார்க்கிறோம்.கட்டுரைகளிலும்புத்தக
ங்களிலும் படிக்கிறோம்.  அவற்றில் ஒரு சிலவற்றை இதன் ஆரம்பத்தில் மாதிரிக்காக எடுத்துக்காட்டியுள்ளோம்.
      ஹிதாயத்துல் அனாம் முதற்பதிப்பு வெளிவந்ததும் கண்ணுற்ற சிலர் ஆவேசமடைந்து அதற்கு மறுப்பு எழுதுமாறு பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்தனர்.பிரபல அரபி மத்ரஸாக்களுக்கு நேரிலும் எடுத்துச் சென்று  மறுப்பு பத்வாக்கேட்டனர்.அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்விரைவில் மறுப்பு வெளியிடப்படும் என்று சில ஆசிரியர்கள் குறிப்பு எழுதினர் இதுவரை வெளிவரக்காணோம்.
      தென்னாட்டுப் பிரபல அரபிக்கலா மத்ரஸா வொன்றில் அதைக் கண்ணுற்ற பேராசிரியர் ஒருவர்இந்த ஹிதாயத்துல் அனாம் அச்சாகு முன்பு என்பார்வைக்கு கிடைத்திருந்தால் இதை ஆதரித்து இரட்டைக் கையயழுத்து ஒப்பம் போட்டிருப்பேன் என்று  மறுப்பு பத்வா கேட்ட வரிடம் கூறியுள்ளாரென்றால் இந்நூலின் எதார்த்தத் தன்மையை பொது மக்கள் நன்கு உணரமுடியும்.
      இந்நூல் பற்றி ஒருவர் வினா விடுப்பதாகவும் அதற்குத்தான் மறுமொழி சொல்வதாகவும் அந்த மூடத்தனத்திற்கு முப்பது உலமாக்கள் சரிகண்டு ஒப்பம் வைத்திருப்பதாகவும் விடைகூறிஒரு வாரப் பத்திரிகையில் இந்நூலுக்கு அதாரப்பூர்வமாக மறுப்புக்கூற சக்தியற்ற அதன் ஆசிரியர் 1-12-1961 இதழில் வரைந்துள்ளார்.
      இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்ததைக் கண்ணுற்ற ஒரு மாதப்பத்திரிகை ஆசிரியர்கேள்வி பதில் பகுதியில் தடுமாற்றம் கொண்டு ஏதேதோ எழுதியுள்ளார்பிதுஅத்துகளைப் பற்றி விபரம் விங்காமல்  சாடியுள்ளார்.இந்நூலை சரிபார்த்து ஒப்பமிட்டுள்உலமாக்கள்முப்திகள்
முதர்ரிஸ்கள்,மேதைகள் பார்த்து இவர்கயல்லாம் சாமானியமாக பொறுப்பற்று சான்று பகரக்கூடியவர்களாஎன்பதனைத் தெளிந்து உண்மையை உணருங்கள்!
      மேற்கண்டவர்களின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்வோம்ஏனெனில்,ஹிதாயத்துல் அனாம் தெளிவான கண்ணாடிஅகத்தினழகு முகத்தில் தெரியுமாப்போல் அவருடைய உள்க் கிடக்கையில் இருக்கக் கூடிய கொள்கையும்,கோலமும் பிரதிபிம்பமாக அவருக்குத் தோற்றமாகி அதை அவர் எழுதிக் காட்டியதில் வியப்பில்லை.
      அசுவத்தின் இந்திரியத்திலிருந்து யானையின் உருவம் உண்டாகப் போவதில்லை மாதுளையின் வித்திலிருந்து மாமரம் முளைக்கப்போவதில்லைஎலுமிச்சங்காய் புளிக்கும்எட்டிக்காய் கசக்கும்அததன் உள்ரங்கம் எப்படியோ அப்படியே ஆண்டவனும் படைத்துள்ளான்.
      சாஸ்வதமான குப்ருடைய அபதீ-காபிர் ஒரு போதும் ஈமான் கொள்மாட்டான்அல்லாஹ்வினால் ஹிதாயத்துக் காண்பிக்கப்பட்ட காபிர்,முன்பு குப்ரில் இருந்தாலும் பின்பு இஸ்லாமைத் தழுவியதன் மூலம் ஈமான் இஸ்லாம் உடையவனாவான்.இஸ்லாத்திலிருந்து மதமாறி முர்த்தத்தாகிப் போனவன் முன்பு இஸ்லாத்திலிருந்தாலும் பின்பு குபிரிலாகிவிடுவான்வாக்கும் மனமும் ஒன்றித்திராத  வஞ்சக முனாபிக்கு இஸ்லாத்திலிருந்து கொண்டே அதன் ஆணி வேரைக் களைய முற்படுவான்.
      வியாதிகளின் தன்மைக்குத் தக்கவாறே அதனதன் குணங்கள் வெளியாவது போல்ஹக்கீம் ஆகிய அல்லாஹ் இதயத்தின் வியாதிகளை.அதனதன் குணங்களை வெளிப்படுத்தச் செய்கிறான்.
      ஒவ்வொருபாத்திரமும் அதனதில் என்னென்ன உள்தோ அதைத்தான் வெளிப்படுத்தும் என்று நாயகம் (ஸல்)நவின்றுள்ளார்கள்.
 
       ஸுன்னத்து வல்ஜமா அத்தார்களின் உயரிய உண்மைக் கொள்கைகளை ஒளிவு மறைவின்றி தெளிவுபட எடுத்துக் கூறும் இந்த ஹிதாயத்துல் அனாம் நூலில் கங்கம் கூற முற்படுபவர்களுக்கு,மெய்ஞ்ஞான சொரூபிமெலானா ஜலாலுத்தீன் ரூமீ (ரஹ்அவர்கது,மஸ்னவீ ­ரீபில் உள்ள. ""சந்திரனில் கங்கம் காணமுற்படுகின்ற நீ சுவனபதியில் முள்ளைத் தேடுபவனாகின்றாய்வேறு எந்த முள்ளையும் காணமாட்டாய்'' என்ற வார்த்தையை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
      எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல­ஃனுஹு வதஆலா ஈருலக இரட்சகர் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா(ஸல்அவர்கள்  பொருட்டாலும்,யஸய்யிதுனா கௌதுல் அஃம் (ரலி),காஜா முஈனுத்தீன் ஜிஷ்தி (ரலி),யஸய்யிது அஹ்மது கபீர் ரிபாயி (ரலி),யஸய்யிதுனா இமாம் ஷாதுலி (ரலி),யஸய்யிதுனா ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலிமாதிஹுர் ரஹூல் ஸதகத்துல்லாஹில் காஹிரி (ரலி)ஆகியவர்களின் பொருட்டாலும்மற்றும் எல்லா அன்பியாக்கள்அவுலியாக்கள் பொருட்டாலும் எந்தனக்கும் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் அகத்திலும்,புறத்திலும்இகத்திலும்பரத்திலும் எல்லாவித நற்பேறுகளையும் தந்தருள்வானாகஆமீன்.
வஹாபிகள் சஹாபிய வேடங்களில்....
தொடர் எண் - 5
 
     அண்டசராசரங்களை சிருஷ்டித்து அதற்குப் பாதுகாவலராய் அவுலியாக்களைஉண்டு பண்ணிக் கண்காணித்து வரும் அல்லாஹ் (ஜல்வுக்கே சர்வ புகழும் உரியதாகும்அகிலத்திற்கு அருட்பிழம்பாய் அவதரித்த அஹ்மது முஜ்தபா முஹம்மது முஸ்தபா (ஸல்அவர்கள் மீதும்.அவர்கது கிளைஞர்கள் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகுக.
           மெய்யும் - பொய்யும்ஒளியும் இருளும்சூடும் - குளிர்ச்சியும்சுகமும் -துக்கமும்,
 பெருமையும் - சிறுமையும்,நன்மையும் - 
தீமையும்
சொர்க்கமும் -நரகமும் ஒன்றுக்கொன்று எதிரிடையாய் நிகழும் சம்பவங்களுள்ளே தான் மலக்கும்-இபுலீஸும்அபூஜஹலும் வலியும்-ஷைத்தானும்நல்லாரும் -
பொல்லாரும் நுழைந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறதுஇப்போராட்டத் திருவிளையாட்டின் வெற்றி தோல்வியின் முடிவே சாட்சாத் எம்பிரானின் பொருத்த வருத்தத்தின் நோக்காக இருக்கின்றது. 


ஆள்கிறார்கள்

      மேற்கூறிய காரணங்களைமுன்னிட்டே  மானிட கோடிகள் நேரான ராஜபாட்டையில் நின்று நழுவி நாசமடையாதிருக்கும் பொருட்டு வழிகாட்டிகளாகவும்,இரட்சகர்களாகவும் அனுப்பப்படும் அவுலியாக்களைப் பற்றி இறைவன் தனது திருமறையில் ""நிழல்'' என்றும் ""மலை''என்றும் வருணித்துள்ளான்இவர்களே மலைகளைப் போல் பூமிக்கு முளைகளாகவும்பூலோகப் பாதுகாவலராகவும்உள்ரங்கத்தில் அண்ட பிண்டங்களை ஆள்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

      
அவர்கள் வபாத்திற்குப் பின்னும் ஜீவனையுடையவர்கள்அவர்கது பூதஉடலை மண் தின்னாது.

      
நபிமார்கது திரேகங்களை மண் தின்பதை விட்டும் அல்லாஹ் ஹறாமாக்கி விட்டான் என்ற வாக்கும்உண்டு.
(இபுனுமாஜாஅபூதாவூதுபைஹக்கி)
      அவர்கள் ஜீவியத்தில் எவ்வாறு மானிட கோடிகளைப் பாதுகாத்து அவர்கது நாட்டத் தேட்டங்களை இறைவன் பொருட்டு நிறைவேற்றி ஆதரித்து வந்தார்களோஅவ்வாறே மரணத்திற் கப்பாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.ஆண்டவன் அன்னவர்களுக்கு அத்தகைய வல்லமையைக் கொடுத்துள்ளான்.


ஒரு நிகழ்ச்சி

      
மஹ்பூபே இலாஹீ ஹள்ரத் நிஜாமுத்தீன் வலிய்யுல்லாஹ்(ரலி)அவர்கள் டில்லியில் அடங்கியுள்ள தங்கது ஞானகுருவுடைய ஷைகாகிய ஹள்ரத் காஜா குத்புத்தீன் பக்த்தி யார் காக்கீ (காஜா முயீனுத்தீன் ஜிஷ்த்தி (ரலிஅவர்கது கலீபா)அவர்கது தர்காவுக்கு ஜியாரத்துச் செய்யச் சென்றார்கள்டில்லியிலுள்ள கபுருகள் எல்லாக் கருமங்களையும் நிறைவேற்றித் தரக்கூடியனவாகவே இருக்கின்றன.´கீன்களுடைய இருதயங்களுக்குச் சுகத்தையளிக்கக் கூடியனவாகவும் இருக்கின்றனநான் என் சொல்வேன்காஜா குத்புத்தீன் (ரலிஅவர்கது றவுலா ­ரீஃபு,ஆரிஃபீன்களுக்குக் கஃபா அல்லவாயினும் அதைவிட்டு நீங்கியது மல்ல என்று பொருள்பட

மஜாறாத்தே திஹ்லீ ஹமாகாமு பக்ஷ்
பதில்ஹாயே உஷ்ஷாக்கு ஆறாமுபக்ஷ்
க்ஷெ அஸா(ன்கஃபயய ஆரிபீன்
கெ ஆ(ன்நீஸ்த் ஜுஸ் றவ்யேகுத்புத்தீன் 

-
 எனக் கவியுரைத்தார்கள்.   நாம் இங்கு வந்திருக்கும் வி­யத்தை அவர்கள் அறிந்திருக்கின்றார்களாஎன்னும் எண்ணம்
அவர்க
து மனதில் உண்டாயிற்று.அவ்வெண்ணம் உதித்து அடங்குவதற்குள்,

மறாஜிந்தா பிந்தார் க்ஷூ 
(ன்கிஷ்த்தன்
மண் ஆயம் ப-ஜா (ன்கர்தூ ஆயீபத்தன்
மதா(ன்காலீ அஸ்   ஹம் - நிUனி மறா
கெபீனம் துறாகர் ந-பீனி மறா

      
உம்மைப் போலவே நம்மையும் ஜீவனுள்வர் என்றறிந்து கொள்வீராக,நான் உயிரோடுதான் இருக்கிறேன்நீவிர் உடலோடு வந்திருக்கிறீர்என்னுடைய ஞாபகத்தை விட்டும் நீவிர் நீங்கியிருப்பதாய் எண்ணவேண்டாம்நீவிர்   என்னைப் பார்க்காவிட்டாலும் நான் உம்மைப் பார்க்கவே செய்கிறேன் என்ற கருத்துள்பதில் கவியாகவே கபுரு ­ரீபுக்குள்ளிருந்து வெளிவந்ததுஇவ்விபரத்தை ஹள்ரத் மெலானா உம்தத்துல் அவுலியா ஷைகு யஃகூபு ஸர்பீ (ரஹ்அவர்கள் தங்கது""ஸியாஹத் நாமா''வில் வரைந்துள்ளார்கள்.
      இதைக்கொண்டு மரணத்திற்குப் பிறகும் அவுலியாக்கள் அழியா நித்திய ஜீவனுடையவர்கள்மானிடரின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் சக்தியுடையவர்கள் எனத் தெரிய வருகின்றதுஆகவேதான்.அவுலியாக்களிடம் உதவி தேடலாமென மார்க்கம் அனுமதித்திருக்கிறது.


நபியிடம் செல்க!

      
இன்னும் அவர்களுடைய நப்ஸுக்கு அவர்கள் அநியாயஞ் செய்துகொண்ட நேரத்தில் (நபியேஉம்மிடம் அவர்கள் வந்தார்களாயின் அல்லாஹ்விடம் அவர்கள் பிழை பொறுக்கத் தேடி அவர்களுக்காக இந்த ரஸூலும் பிழைபொறுக்கத் தேடினார்களேயானால் அல்லாஹ்வை கிருபையானாகவும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்று (4:64)இறைவசனமும் உள்து.

      
முனாபிக்குகள் நபிநாயகம் (ஸல்)அவர்களிடம் பஞ்சாயத்திற்கு வராமல் யூதர்களிடமே பஞ்சாயத்திற்குச் சென்றதால் தங்களுடைய இக்குற்றத்தை மன்னித்தருளும்படி இறைவனிடம் அவர்கள் தவ்பாச் செய்யவேண்டும்அவ்வாறு தவ்பாச் செய்யும் போது நாயகம் (ஸல்)அவர்களும் அந்த ஜனங்களுக்காக பிழை பொறுக்கும்படி பிரார்த்திக்க வேண்டும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ்  குறிப்பிட்டுள்ளான்ஏனெனில் நபிநாயகம்  (ஸல்அவர்களிடம் பஞ்சாயத்திற்கு வராமல் மற்றவர்களிடம் செல்வதானது அல்லாஹுதஆலாவின் கட்டளைக்கு மாறாக இருப்பதுடன் நபி நாயகம் (ஸல்அவர்களுக்கு மனதை நோவினை செய்வதாகவும் இருக்கிறது.ஆதலால்அவர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்தால் மட்டிலும் போதாது - நபி நாயகம் (ஸல்அவர்களிடமும் மன்னிப்புக்கேட்டு நபி நாயகம் (ஸல்)அவர்கள் அதனை அங்கீகரித்து அவர்களுக்காக பிழை பொறுக்கும்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று ஏற்பட்டது.

கை மேல் பலன்

      
பெருமானார் (ஸல்அவர்கது பரிசுத்தத் திருமேனியை அடக்கம் செய்யப்பட்டு மூன்று தினங்களுக்குப் பிறகு ஒருகாட்டறபி நாயகம் (ஸல்அவர்கது கபுரு ­ரீஃபு மீது விழுந்து புரண்டுஅந்தப் புனித மண்ணைத் தனது தலை மீது போட்டுக்கொண்டுயாரஸூலல்லாஹ்!
தாங்கள் கூறியவற்றை நாங்கள் கேட்டிருக்கின்றோம்தாங்கள் அல்லாஹ்விடம் இருந்து பெற்றவைகளைஎங்களுக்களித்தீர்கள்
நாங்கள் தங்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம்.இறைவன் தங்களுக்கும் திருமறை குர்ஆனைக் கொடுத்து அதில் ""வலவ் அன்னஹும் இத் லமூ.....'' என்ற ஆயத்தையும் இறக்கியுள்ளான்தன்னுடைய நப்ஸின் மீது அநியாயம் செய்து கொண்ட மாபாவிதற்பொழுது தங்கது சன்னிதானத்தில் உதவியை நாடி வந்திருக்கின்றேன்  என்று அழுது புரண்டு கண்ணீர் வடித்துக் கதறினார்.அக்கணமே. ""நிச்சயமாகஉமது பிழை பொறுக்கப்பட்டது''  என்ற சப்தம் கபுருரீபுக்குள்ளிருந்து  வெளிவந்தது. (இவ்விபரம் மிஸ்பாஹுள்லாம்,மவாஹிபுல்  
 லதுன்னிய்யா,முக்த்தபாத்துல்வபாகுலா ஸத்துல் வபா முதலான நூற்களில் காணப்படுகின்றன.)
             மேலும் உத்பா (ரலிஎன்ற ஸஹாபி  கூறுகின்றார்கள்:
             அந்தக் காட்டரபி  மேற்கூறியவாறு சொன்ன சமயத்தில்  நானும் அங்கிருந்தேன்எனக்குத் தூக்கம் மிகைத்ததால் அங்கு உறங்கிவிட்டேன். அவ்வமயம் நபிநாயகம்(ஸல்)அவர்கள் எனக்கு கனவில் காட்சியளித்து, ""உத்பாவேஅல்லாஹ் அவருடைய பிழையைப் பொறுத்தான் என்ற நன்மாராயத்தை அவருக்குத் தெரியப்படுத்துவீராக!'' என்று அருளினார்கள்நான் விழித்தெழுந்து பார்த்தபோது அந்தக் காட்டரபியைக் காணவில்லை.
             (இவ்விபரம் தாரீக் இபுனு அஸாக்கிரிலும்இபுனு ஜவுஸியவர்களின்´யரிலும் காணப்படுகிறது)
            இதைக் கொண்டும்ஏனைய ஆயத்து,ஹதீதுகளைக் கொண்டும் அன்பியா,அவுலியாக்களிடம் உதவிஇரட்சிப்புத் தேடலாம் என்பது வெட்டவெளிச்சமாகக் காணக்கிடக்கின்றதுஅவர்கள் புரியும் உதவிஇரட்சிப்பு உள்ரங்கத்தில் அல்லாஹ்  செய்யும் உதவி,இரட்சிப்பேயாம்அன்னார்களை எவரும் அல்லாஹ் என்று கூறுவதில்லை.நினைப்பது மில்லை.
     அவுலியாக்கள் அல்லாஹ் அவில் தங்களை ஃபனாவாக்கிவிட்ட  காரணத்தால் அவனைக் கொண்டே  அவர்கள் தரிபட்டுள்னர்அவனுடைய உத்தரவுகொண்டே மனிதர்களுடைய நாட்டதேட்டங்களை
 நிறைவேற்றிக்கொடுக்கிறார்கள்எனவே செய்து முடிப்பவன் அல்லாஹ்வே.

எல்லாம் அவனே!

      
உதாரணமாகசோறு பசியைப் போக்கிவிட்டதுதண்ணீர் தாகத்தைத் தீர்த்து விட்டதுவெள்ம் வேளாண்மையை அழித்துவிட்டதுமருந்து பிணியைப் போக்கிவிட்டதுமேகம் மழையை வரு´த்தது என்றெல்லாம் நாம் சர்வ சாதாரணமாகக் கூறுவதுண்டுஹகீகத்தில் பசியைப் போக்கி வைப்பவனாகவும்,தாகத்தைத் தீர்த்துவைப்பவனாகவும்.அளிப்பவனாகவும்
அழிப்பவனாகவும்,வியாதியைஉண்டாக்குபவ
னாகவும்,சொஸ்தப்படுத்துபவனாகவும்மழையை வரு´க்கச் செய்பவனாகவும்,எல்லாவற்றையும் செய்து முடிப்பவனாகவும் அல்லாஹ் ஒருவனிருக்கஅவனது செயல்களைஇரவலாகசம்பந்தப்பட்ட வஸ்துக்களுடன் சேர்த்து (நிஸ்பத்து செய்துஒப்பிட்டுக் கூறுவது நமது தினசரி வாழ்க்கையில் நடைபெறும் சம்பவமாக உள்துஇதற்கு"இஸ்னாதே மஜாஸீஎன்று சொல்லப்படும்.வஹ்ஹாபியம் ஒரு பார்வை
அல்லாஹ்வையும் ரஸூல் (ஸல்) அவர்களையும் நம்புவது மட்டும் ஈமான் இஸ்லாம் அல்ல. உண்மையான தன்மைகளை  அறிந்து பரிபூரணமான வகையில் விசுவாசங் கொள்ள வேண்டும். அவை எளிமையான முறையில் குர்ஆனில் தரப்பட்டுள்ளன.  குர்ஆன் தர்ஜுமாவை ஒரு பாமரன் வாசித்தால்கூட அவன் இதைச் சுலபமாகக் கண்டுகொள்ளலாம்.  பிரபலமான ஹதீஸ்களிலும் இவை சொல்லப் பட்டிருக்கின்றன.  இப்னு தைமிய்யாவின் காலம் முதற் தற்காலம் வரை வெளிவந்த தீய கொள்கைகள் சிலவற்றை இங்கு தந்தோம் அல்லவாஅவற்றில் பலவற்றை  தவறானவை,  உண்மைக்கு முரண்பட்டவை என்பதையும் இவ்விதமே சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். யூதமதமும் கிறிஸ்தவ  மதமும் மற்ற உலக மதங்களும் இஸ்லாம் மார்க்கமாகவே ஆரம்பித்தன.  ஆனால் இறைவனையும் அவரவர்களின் தூதர்களையும் பற்றிய உண்மைகளைவிஷ­மிகள் திரித்துவிட்ட படியால்தான் அவை அல்லாஹ்வால் நிராகரிக்கப்பட்டன. இந்த விஷ­மத்தைச் செய்தவர்கள் அந்த மதங்களுக் குள்ளேயே இருந்து கொண்டேதான் செய்தார்கள்.  அதே கதைதான் இப்போது இஸ்லாத்துக்குள் நடந்து வருகிறது. எச்சரிக்கை! தனது இறைவனையும் நபியையும் மட்டந் தட்டும் எவனும் எப்படி அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியும்அவன் அந்த மார்க்கத்தின் எதிரியேயல்லவா? அல்லாஹ்வும் ரஸூலும் சத்திய சந்தர்கள் என்கிறது திருமறை. வஹ்ஹாபியமோ இறைவன் பொய் பகரக்கூடும் என்கிறது.  மேலும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதன் மூலம்  ரஸூல் (ஸல்) அவர்களையும் பொய்ப்படுத்திவிடுகிறது.  அல்லாஹ் விடமும் ரஸூல் (ஸல்) அவர்களிடமும் பிழைகளைக் காணும் ஒரு கூட்டம் எப்படி இஸ்லாத்தினுள்ளே இருக்க முடியும்?சந்தேகமற்றதுதெளிவானது என அல்லாஹ்கூறும் வேதத்தின் கருத்திலேயே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒரு பிரிவு அந்த வேதத்தை மறுக்கிறதேயல்லாமல் வேறென்ன?அதனால்தான் அதனை -இஸ்லாமல்லாத கூட்டம்- என்று அசல் ஸுன்னத் ஜமாஅத் கணிக்கிறது.  எனவே நாம் உண்மையான,பரிபூரணமான முஸ்லிமாகத் திகழ வேண்டுமானால்தீய கொள்கைகளை அடையாளங்கண்டு அவற்றை விட்டும் பரிசுத்தமாக இருந்துகொள்வது நம் ஈடேற்றத்துக்கு  அத்தியாவசியம். அவ்வாறு நாம்திகழ அல்லாஹ் ரஸூலின் அருளை வேண்டுவோம்.  இமாம்கள்,வலிமார்கள் வழி நடப்போம்!                     (முற்றும்)

மர்ஹூம் சிr. னி.ணூ. லியாகத் அலி  அவர்கள்திருச்சி.